Saturday, July 19, 2014

On Saturday, July 19, 2014 by Anonymous in ,    
தொட்டியம் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் மணல் குவாரி அமைக்க நடவடிக்கை

தொட்டியம் அருகே ஸ்ரீராமசமுத்திரத்தில் மணல் குவாரி அமைக்க மாவட்ட வருவாய் அலுவலர் நேரடியாக சென்று மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி படுகையில் மணல் குவாரி அமைக்க இப்பகுதி பொதுமக்கள் கூறும் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்றால்போல் நடைமுறை படுத்த திருச்சிமாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்ப கராஜ் நேரடியாக சென்று பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
இதில் தொட்டியம் தாசில்தார் வளர்மதி, ஒன்றியக் குழுத்தலைவர் சேதுபதி, ஊராட்சி தலைவர் வசந்தாதேவி உள்பட துறை சம்பந்தபட்ட அதிகாரிகள், விவசாயிகள், ஊர்பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: