Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
ஐக்கிய அரபு எமிரேட்சின் நகரங்களுள் ஒன்றான ஷார்ஜாவில் 118 கிலோகிராம் போதைப்பொருளுடன் 10 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
போதைப்பொருள் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து காலித் துறைமுக பகுதியை திடிரென சுற்றிவளைத்த பொலிஸ் குழு இந்த கும்பலை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை 6 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பிய நிலையில் 4 பேர் ஸ்தலத்திலேயே கைது செய்யப்பட்டார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விரைவாக செயற்பட்ட பொலிசார் சற்று நேரத்திற்குள் தப்பியோடிய 6 கடத்தல்காரர்களையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 118 கிலோ போதைப்பொருளில் 110 கிலோ ஹசீஷா 8 கிலோ ஒபியம் மற்றும் கிரைஷ்டல் என்பனவாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் அரேபிய, ஆசிய, மற்றும் ஆபிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என பொலிசார் குறிப்பிட்ட அதே நேரம் அவர்கள் குறிப்பாக எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என குறிப்பிடவில்லை.
அண்மைக்காலத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சில் கைப்பற்றப்பட்ட அதிக எடை கொண்ட போதைப்பொருட்கள் இவையே என ஷார்ஜா பொலிஸ் பிரிகேடியர் முஹம்மத் ஈத் அல் மஸ்லும் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் சட்டத்தின் முன் ஆஜராக்கப்படவுள்ளனர்.

0 comments: