Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    




உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில், உடுமலை வட்டாரத்தில் பெரிய வெங்காயம் சாகுபடியை அதிகரிக்க நடப்பு ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டருக்கு ஆகும் சாகுபடி செலவான ரூ. 12 ஆயிரத்தை மானியமாக தோட்டக்கலைத் துறை மூலம் வழங்கப்படுகிறது. எங்கெல்லாம் சின்ன வெங்காயம் விளைகிறதோ அங்கெல்லாம் பெரிய வெங்காயம், வெள்ளை வெங்காயம் ஆகியவற்றை பயிரிடலாம். 
பெரிய வெங்காய சாகுபடியில் ஊடுபயிராக வெண்டை, முள்ளங்கி, கீரை வகைகளை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம். பெரிய வெங்காயம் ஹெக்டேருக்கு 16 டன் வரை மகசூல் கிடைக்கும். உடுமலையில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.
  பெரிய வெங்காயத்தில் ஊடுபயிர் சாகுபடி மூலம் பலவித பூச்சிகள் பெருகாமல் தடுக்கலாம். காய்கறி உற்பத்திக்கு தற்போது ஒருங்கிணைந்த உர உபயோகம் மான்யமாக ரூ.1200 வழங்கி அதற்கு இடுபொருளான பாஸ்பேட் பாக்ட்ரீயா, அசோஸ்பைரில்லம் வழங்கப்படும். விவசாயிகள் குழுக்களாக பதிவு செய்தால் அநேக சலுகைகளோடு காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: