Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    






திருப்பூர், : திருப்பூர் மாவட்டத்தில் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 34 ஆயிரத்து 600 பேர் வங்கி கணக்குகளை தொடங்கியுள்ளதாக கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பிரதமர் மக்கள் நிதித் திட்டம் (ஜன் தன் யோஜனா திட்டம்) நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாரிவேல், திட்ட இயக்குநர் திரவியம், ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா சரவணன், கனரா வங்கி மண்டல பொது மேலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இதில், கலெக்டர் கோவிந்தராஜ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:
வங்கிக் கணக்குகள் மூலம் சேமிக்கப்படும் பணம் பாதுகாப்பாகவும், அப்பணத்திற்கு வட்டியும் கிடைக்கும். கணக்கு தொடங்கும் சமயத்தில் ஒரு ஏ.டி.எம், டெபிட் கார்டு வழங்கப்படும். இதன் மூலம் விரும்பும் போது எந்த வங்கி ஏ.டி.எம்., லும் அனைத்து  நாட்களிலும் பணம் எடுத்துக் கொள் ளலாம்.  இந்த அட்டையைப் பயன்படுத்தி வணிக நிறுவனங்கள் மற்றும்  கடைகளில் பொருட்கள் அல்லது சேவை கள் பெறமுடியும். மேலும், இந்த அட்டைக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான உள்ளடக்கிய விபத்து காப்பீடு வசதி உள்ளது.  அடிப்படை சேமிப்பு வங்கி கணக்கிற்கு குறைந்தபட்ச நிலுவைத் தொ கை எதுவும் தேவை இல்லை. 
 பணத்தை எப்போது வேண்டுமானாலும் தேவைப்படும் போதெல்லாம் வங்கிக் கண க்கில் போடவோ, எடுக்கவோ செய்யலாம். இது தவிர தேசத்தின் எப்பகுதிக்கும் பணம் பாரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணை சேமிப்பு கணக்கில் இணைக்க முடி யும். அரசு மானியத் தொ கைகள், சமையல் எரிவாயு போன்றவை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களில் பங்கேற்க இயலும். 
இந்த வங்கி கணக்கின் மூலம் வங்கியில் ரூ.1000 கடன் பெற்று அத னை 6 மாத காலம் வங்கிக் கணக்கில் திருப்தியான வரவு செலவு செய்திருந்தால் மிகை ப்பற்றுக் கடன் பெற வாய்ப்பு உள்ளது. இக்கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அரசின் மானியங்கள்  மற்றும்  100 நாள் வேலை உறுதி  திட்டத்தின் கீழ்  வழங்கப்படும் தொகை  நேரடியாக தங்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.  
இந்த  திட்டம் அறிவித்த நாளான கடந்த 16ம் தேதி முதல் 27ம் தேதி வரை மாவட்டத்தில் 34 ஆயிரத்து 600 கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக வங்கியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.  இது மிகவும் பாராட்டுக்குரியது.  இன்றைய தினம்  இந்த திட்டத்தின் வாயிலாக  கணக்குகள் தொடங்க காலை முதல்  அனைத்து வங்கியைச் சார்ந்த அலுவலர்கள் இங்கே முகாமிட்டு இப்பணியை மேற்கொண்டுள்ளார்கள்.  எனவே, இது போன்ற  வங்கிக் கணக்கினை ஒவ்வொருவரும் தொடங்கி அதன் மூலம் அரசின்  மானியங்களை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்வதுடன்  தங்கள் பகுதிகளி லுள்ளவர்களையும் இது போன்ற வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 
இவ்வாறு கோவிந்தராஜ் பேசினார்.
இக்கூட்டத்தில் அனை த்து வங்கி அலுவலர்களும், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனா. 
முடி வில்  ஒவ்வொரு வங்கியிலும் இந்த திட்டத்தின் மூலம் வங்கி கணக்கு தொடங்கியவர்களுக்கு வங்கி கணக்கு  புத்தகத்தை கலெக்டர் கோவிந்தராஜ் வழங்கினார்;

0 comments: