Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
திருப்பூர், :   கரூரில் இருந்து முறையான ஆவணம் இல்லாமல் மணல் ஏற்றிவந்த 10 லாரியை திருப்பூர் அதிகாரிகள் பிடித்தனர்.
கரூர் பகுதியில்  இருந்து லாரிகள் மூலம் மணல் எடுத்து கொண்டு திருப்பூர் மாவட்டம் வழியாக கொண்டு சென்று வியாபாரம் செய்துவருகின்றனர். 
நேற்று மதியம் 3 மணி அளவில் திருப்பூர் ஆர்.டி.ஓ பழனிகுமார், மற்றும் தாராபுரம் ஆர்.டி.ஓ திவாகர் ஆகியோர் படியூர்  சோதனை சாவடியில்  வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மணல் ஏற்றி வந்த லாரிகளை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அதில் 10 லாரிகளில் முறையான ஆவணங்கள் இல்லை. இதை தொடர்ந்து 10 லாரிகளை திரூப்பூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். 
மேலும் ஆர்.டி.ஓ கூறுகையில், ‘முறையான ஆவணங்கள் காண்பித்த பின்னர் மணல் லாரிகள் ஒப்படைக்கப்படும்,’ என்றார்.

0 comments: