Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் இன்று துவங்கி, செப்.,5ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான <ஷ்ஷ்ஷ்.tக்ஷீதீ.tஸீ.ஸீவீநீ.வீஸீ-ல்>   வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் திருப்பூர்   மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இணையதளம் வாயிலாக திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக பணிநியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 
இதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 30ம் தேதியும் (இன்று), வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) செப்.,1ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 2ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு) 3ம் தேதியும், வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 4 மற்றும் 5ம் தேதியும் காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

0 comments: