Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    



கோவை, :கோவை மாநகராட்சி அதிமுக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணபதி ராஜ்குமார் (49) கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் உள்ளார். கோவை கணபதி பகுதியில் வசிப்பதால் இவருக்கு கணபதி ராஜ்குமார் என பெயர் வந்தது. கணபதி நல்லதண்ணீர் தோட்டம் பகுதியில் தனது வீட்டருகே குமாரசாமி மெட்ரிக் மேல்நிலை பள்ளி என்ற ஆங்கிலவழி பள்ளியை நடத்தி வருகிறார். இவரது மனைவி தமயந்தி இப்பள்ளியை கவனித்து வருகிறார். எம்.ஏ., எல்.எல்.பி. படித்துள்ளார். தற்போது, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
1995ல் மாணவர் அணி மாவட்ட தலைவராக இருந்தார். பின்னர், தொண்டாமுத்தூர் பகுதி செயலாளர் ஆனார். 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. இத்தேர்தலில் வெற்றிபெற்று கவுன்சிலர் ஆனார். தொடர்ந்து, 2006, 2011 என அடுத்தடுத்து மூன்று முறை ஒரே வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 
தற்போது, கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக உள்ளார். கோவை மாநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து செ.ம.வேலுசாமி கடந்த ஜூன் மாதம் நீக்கப்பட்ட பிறகு, இவர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.  தற்போது, முதல்முறையாக மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

0 comments: