Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    





பொள்ளாச்சி,  :  பொள் ளாச்சி பகுதியில் ஆபாச படங்களை சி.டி. மற்றும் மெமரி கார்டுகளில் பதவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில செல்போன் கடைகளில், கம்ப்யூட்டரில் இருந்து மெமரிகார்டுகளில் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து விற்பனை செய்வதாகவும். சில சிடி கடைகளில் ஆபாச படம் மற் றும் புதுப்பட சிடி விற்பனை செய்வதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மேற்கு ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் ராஜாமில் ரோடு, பெருமாள் செட்டி வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள செல்போன் கடைகள் மற்றும் சி.டி. கடை களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் ஒரு சில கடைகளில் கம்ப்யூட்டரில் இருந்து செல்போன்களுக் கான மெமரிகார்டுகளில் ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்தும், ஆபாச படங்கள் அடங்கிய சி.டி. க்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
 இதில், ராஜாமில்ரோட்டில் உள்ள ஒரு செல்போன் கடையில் மெமரிகார்டில் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து கொண்டிருந்த நோதாஜி ரோட்டை சேர்ந்த சரவணக்குமார் (29) என்பவரையும், பெருமாள்செட்டி வீதியில் உள்ள செல்போன் கடையில் கம்ப்யூட்டர் மூலம் ஆபாச படம் பதிவிறக்கம் செய்து விற்பனைக்கு வைத்திருந்த இந்திராநகரை சேர்ந்த செந்தில்குமார்(38) என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆபாச படம் பதிவிறக்கம் செய்ய பயன்படுத்திய இரண்டு கம்ப்யூட்டர் மற்றும் மெமரி கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் பெருமாள்செட்டி வீதியில் உள்ள இரண்டு சிடி  கடைகளில் சோதனை செய்தபோது அங்கு 41 ஆபாசபட சிடிக்கள் மற்றும் சமீபத்தில் வெளி யான ஆஞ்சான், முண்டாசு பட்டி, அரிமாநம்பி, வேலை யில்லா பட்டதாரி உள்பட உரிமம் இல்லாத புதுப்பட சிடிக்கள் 97ஐ பறிமுதல் செய்தனர். ஆபாசபடம் மற்றும் புதுப்பட சிடிக்களை விற்பனைக்கு வைத்திருந்த குமரன்நகரை சேர்ந்த அபுபக்கர்(25) இந்திராநகரை சேர்ந்த ரபீக்(40) ஆகியோரை கைது செய்தனர். கிழக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட இமமாம்கான் வீதியில் உள்ள ஒரு சிடிக்கடையில் சோத னை செய்தபோது, ஆபாச சிடி உள்பட மொத்தம் 28 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதனை விற்பனை செய்ய வைத்திருந்த மரப்பேட்டையை சேர்ந்த ராமராஜ் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

0 comments: