Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    






கோவை, : மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படாமல் தொங்கலில் 13 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன.
கோவை மாநகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஏறக்குறைய இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன விற்பனை ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. கோவை சிட்கோவில் துவங்கி, இருகூரில் முடியும் ரயில்பாதை மாநகரை இரண்டாக பிரிக்கிறது.கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறைக்க 11 இடங்களில் ரயில்வே மேம்பாலம், 2 இடங்களில் ரயில்வே கீழ்பாலம் என மொத்தம் 13 பாலம் கட்ட திட்டமிடப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஆனால், பணி துவக்கப்படவில்லை. இருகூர், நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பீளமேடு, விளாங்குறிச்சி, லட்சுமி நகர், ஆவாரம்பாளையம், ரத்தினபுரி 7வது வீதி, தயிர் இட்டேரி, ஒண்டிப்புதூர் சுங்கம், வெள்ளலூர் என 11 ரயில்வே மேம்பாலம், 2 ரயில்வே கீழ்பாலம் பணி துவங்கப்படவில்லை. 
பல இடங்களில், நில ஆர்ஜிதம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். சிவில் வழக்கு நிலுவை, நில ஆர்ஜிதம், இழப்பீடு வழங்குவதில் தொய்வு போன்ற பல காரணங்களால் பாலம் கட்டும் பணி துவக்கப்படாமல் தொங்கலில் உள்ளது. இந்த சிக்கல்களை எல்லாம் களைந்தால் மட்டுமே பாலம் கட்டுமான பணியை துவக்கமுடியும், இதற்கு இன்னும் 5 ஆண்டுகூட பிடிக்கும் என மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.இதுபற்றி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் வேகமாக நடந்து வந்த பணிகள் தற்போது மந்த நிலையில் உள்ளன. குறிப்பாக, கடந்த 3 ஆண்டு காலத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்கு நில ஆர்ஜிதம் போர்க்கால அடிப்படையில் செய்யப்படவில்லை. 
அதனால்தான் இவ்வளவு இழுபறி நீடிக்கிறது. நிலஆர்ஜிதம், சிவில் வழக்கு, இழப்பீடு என அனைத்தையும் விரைவாக மேற்கொண்டு, பாலம் கட்டுமான பணியை துவக்கவேண்டும். அப்படி துவக்கினால்தான் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். இல்லையேல், ஒவ்வொரு ஆண்டும் வாகன எண்ணிக்கை அதிகரிக்கும். சிக்கல் இன்னும் வலுக்கும்‘‘ எனக்கூறியுள்ளார்.

0 comments: