Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    






பொள்ளாச்சி, :  பொள் ளாச்சி அருகே, வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் அருகே உள்ள மன்றாம்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் கஜேந்திரன் (28). இவர் விவசாய தொழிலோடு தனியார் காப்பீட்டு நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில், வீட்டிலிருந்து வெளியே சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். 
இந்நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள ஆறுச்சாமி என்பவரது தோட்டத்து கிணற்றில் வாலிபர் ஒருவர் ரத்தகாயத்துடன் ஆடைகளின்றி பிணமாக கிடந்ததை பார்த்த சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தக வல் அறிந்ததும் பொள்ளாச்சி டிஎஸ்பி., முத்துராஜன், நெகமம் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐ.,செந்தில்வேல், பெரு மாள் உட்பட போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கிணற்றில் இருந்த பிரேதத்தை மீட்டு வெளியே கொண்டு வந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கஜேந்திரன் என்பது தெரிய வந்தது. அவரது மார்பு, வயிறு, கழுத்து மற்றும் முதுகு பகுதி என உடலின் பல இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டிருந்தது. கஜேந்திரனின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக பொள் ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கஜேந்திரன் பிரேதம் கிடந்த கிணற்று பகுதியிலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குருநெல்லி வாய்க்கால்மேட்டு பகுதியில் ரத்தக்கறை இருந்தது. மேலும், பிராந்தி பாட்டில்கள் சிதறி கிடந்தது. ஆகவே கொலையாளிகள் கஜேந்திரனை வீட்டிலிருந்து வரைவழைத்து, குருநெல்லி பாளையம் வாய்கால் மேட்டு பகுதியில் வைத்து, கத்தியால் குத்தி கொலை செய்து, பின் கிணற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என்றனர்.
கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: