Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by Unknown in ,    

அரக்கோணம் அடுத்த சாலை கிராமத்தில் கரூர் வைஸ்யா வங்கி உள்ளது. இதில் கேஷியர்களாக லோகேஷ், பிரதீப் ஆகியோர் உள்ளனர்.
இன்று காலை 10.45 மணியளவில் வங்கியிலிருந்து 2 பேரும் ரூ.30 லட்சம் பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு மின்னல் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் கட்டுவதற்காக எடுத்துச் சென்றனர்.
மின்னல் ஏரிக்கரை பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே பைக்கில் 3 பேர் முகமூடி அணிந்து வந்தனர். அவர்கள் திடீரென லோகேஷ், பிரதீப் சென்ற பைக்கை வழிமறித்து நிறுத்தினர்.
இதையடுத்து வேகமாக இறங்கிய அவர்கள், லோகேசையும், பிரதீப்பையும் கத்தியால் வெட்டினர். அதிர்ச்சியடைந்த அவர்கள் சுதாரிக்க முயல்வதற்குள் அவர்களிடமிருந்த ரூ.30 லட்சம் இருந்த பணப்பையை பறித்துக் கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த கேஷியர்கள் கத்தி கூச்சலிட்டனர். அங்கிருந்தவர்கள் ஓடிவந்து கொள்ளையர்களை துரத்தி சென்றனர். ஆனால் அவர்களை பிடிக்க முடியவில்லை. காயமடைந்த கேஷியர்கள் 2 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அரக்கோணம் டி.எஸ்.பி. கண்ணப்பன், தாலுகா இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் வங்கி கேஷியர்களை கத்தியால் வெட்டி பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அரக்கோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: