Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in    


கான்பூர்,

பள்ளியில் ஆடையை அவிழ்த்து ஆசிரியை தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பள்ளிக்கு செல்போன்

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரின் நஜியாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் ஆறாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு செல்போன் கொண்டு வந்தார். பள்ளிக்கு வந்தபோது சிறுமியின் புத்தகப் பையினை பள்ளி ஆசிரியை சோதனை செய்தார்.

அப்போது மாணவியின் பையில் இருந்து ஆசிரியை செல்போன் ஒன்றை கண்டுபிடித்தார். பள்ளிக்கு மாணவி செல்போன் கொண்டு வந்ததால் கடும் ஆத்திரம் அடைந்த ஆசிரியை அவரை திட்டியுள்ளார். பலமாக அடித்துள்ளார்.

ஆடையை அவிழ்த்து தண்டனை

பின்னர் ஆசிரியை சிறுமியின் ஆடையை அவிழ்த்து தண்டனை கொடுத்துள்ளார். மாணவியின் ஆடைகளை அவிழ்த்து சுமார் 2 மணி நேரம் வகுப்பறையில் அப்படியே நிற்க வைத்து தண்டித்துள்ளார்.

இதனால் பெரும் அவமானம் அடைந்த மாணவி சோகமாக வீடு திரும்பினார்.

மாணவி தற்கொலை

மனவேதனை அடைந்த மாணவி நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவியின் இறப்புக்கான காரணத்தை அறிந்து கொண்ட உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மாணவியை தண்டித்த ஆசிரியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தினர். உடனடியாக போலீஸ் எஸ்.பி. எம்.பி. வர்மா சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் பெற்றோர்களிடம் புகாரை பெற்று எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட்டார்.

இதற்கிடையே மாணவியை தண்டித்த ஆசிரியை தலைமறைவாகிவிட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஆசிரியை வலைவீசி தேடி வருகின்றனர். 

0 comments: