Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in , ,    

ஐ படம் சம்பந்தமான செய்திகள் சமீபத்தில் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தின் சில காட்சிகளை முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு நிருபர்களுக்கு போட்டுகாட்டிய ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியையும் உறுதிபடுத்தியுள்ளார்.
இந்த படத்தின் மீதான் பாசிட்டிவ் விமர்சனங்கள் பத்திரிக்கையாளர்கள் கூறியுள்ளனர். விக்ரம், எமி ஜாக்சன் நடித்திருக்கும் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் செப்டம்பர் 15ந் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த வேலைகள் நடந்து வருகிறது. இதில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் கலந்து கொள்கிறார். மேலும் தெலுங்கு ஐ படத்தின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடக்கவிருக்கிறது, இதில் ஜாக்கி சான் கலந்து கொள்ளவிருக்கிறார். நீண்ண்ண்ட நாட்களாக வரும் ஆனா வராது என்றிருந்த ஐ படம் தற்போது ரிலீஸ் தேதியை நெருங்கியுள்ளதால் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கத்தி, அஜித் நடிக்கும் புதிய படம், விஷால் நடிக்கும் பூஜை ஆகிய படங்கள் தீபாவளிக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐ படம் உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியிடுகிறார்கள்…

0 comments: