Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press in ,    

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியம் நத்தக்காடையூர் அருகே உள்ள சுதந்திர போராட்ட மாவீரன் தீரன்சின்னமலை பிறந்த ஊரான பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலப்பாளையத்தில் தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தின் சார்பில் ரூ.5 லட்சம் செலவில் தீரன்சின்னமலை சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி கொ.ம.தே.க சார்பில் நிதி உதவி வழங்கும் விழா மேலப்பாளையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தலைமை தாங்கி தீரன்சின்னமலை நற்பணி மன்றத்தலைவர் எம்.எஸ்.ராமசாமி மற்றும் தீரன்சின்னமலை சிலை அமைப்பு கமிட்டி உறுப்பினர் எம்.செல்வம்ராமசாமி, எம்.எஸ்.துரைச்சாமி ஆகியோரிடம் முதல் தவணையாக ரொக்க தொகை ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். இதில் புறநகர் மாவட்ட செயலாளர் கங்காசக்திவேல், ஒன்றிய தலைவர் பூச்சக்காடு மணி (எ) சண்முகம், செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, துணை செயலாளர் சசிக்குமார், பழையகோட்டை ஊராட்சி கொ.ம.தே.க நிர்வாகிகள் சம்பத்குமார், ரஞ்சித், விஜி, லோகநாதன், ரகு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: