Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by TAMIL NEWS TV in ,    



வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர் குருஜி ஈரோடு வருகை தந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
பிறகு அவர் மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறைக்கு சென்றார். பாய்ந்து செல்லும் காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து பூக்கள் தூவி வழிபட்டார்.
வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் குருஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:–
ஈரோடு மாவட்டத்துக்கு முதன் முறையாக வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பவானி சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. எனக்கு இது வருத்தத்தை கொடுத்து உள்ளது.
நவராத்திரி தினத்தில் உலக நன்மை வேண்டி இந்தியா முழுவதும் யாகங்கள் நடத்தப்படும். அதுபோல ஈரோட்டிலும் யாகங்கள் நடத்த வேண்டும். இதனால் அனைத்து நலன்களும் நமக்கும் கிடைக்கும்.
வன்முறை சம்பவங்கள் பெருகி வருவது மிகவும் கவலை அளிக்கிறது. இதனை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும். வன்முறை அமைப்புகளுக்கு பொது மக்கள் செல்வதையும் தடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுக்கு மேலாக மத ஒற்றுமையுடன் சேர்ந்து வாழும் பண்பாடு இருந்து வருகிறது. எனவே ஒற்றுமையாக நாம் வாழ்ந்து வன்முறையை அறவே தவிர்க்க வேண்டும் பூரண மதுவிலக்கையும் தமிழ்நாட்டில் கொண்டு வர வேண்டும். மதுவால் கிராமப்புற பெண்கள் மிகவும் துயரம் அடைந்து உள்ளனர்.
வாழும் கலை குடும்பம் சார்பில் மரங்கள் வளர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டில் நல்ல மழை பெய்ய நாம் அனைவரும் அதிகளவில் மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும்.
இவ்வாறு ரவிசங்கர் குருஜி கூறினார்.

0 comments: