Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press in , ,    

தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் வீர மரணம் அடைந்தார்.

சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல்களை துச்சமாக எண்ணி திறமையாக போரிட்டு உயரதிகாரிகளின் பாராட்டைப்பெற்றவர் அவர். தனக்கு கீழ் உள்ள படையினரை வழிநடத்துவதில் திறமை மிகுந்தவர். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சோஃபியானில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், கடுமையாக போரிட்ட அவர் நாட்டுக்காக தனது இன்னுயிரை தியாகம் செய்தார்.

நாளை டெல்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில், அவரது தியாகத்தை போற்றும் வகையில் மத்திய அரசு அவருக்கு அசோக் சக்ரா விருது வழங்க உள்ளது.

0 comments: