Friday, August 08, 2014

On Friday, August 08, 2014 by Unknown in ,
சேது பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 20ஆவது ஆண்டு துவக்க விழா வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் மற்றும் நிறுவனர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார். நிர்வாக இயக்குநர்கள் எஸ்.எம்.சீனிமுகைதீன், எஸ்.எம்.சீனிமுகம்மது அலியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி இயக்குநர்கள் எஸ்.எம்.நிலோபர் பாத்திமா, எஸ்.எம்.நாசியா பாத்திமா ஆகியோர் முதலாமாண்டு கலைப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
கல்லூரி முதல்வர் சு.செந்தில்குமார் வாழ்த்திப் பேசினார். சிறப்பு விருந்தினர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இயந்திரவியல்துறையில் கட்ஆப் 194.5 மதிப்பெண்ணுடன் தேர்வு செய்த மாணவர் இம்ரான், 191 கட்ஆப் பெற்று தேர்வு செய்த மாணவர் பிரபு ஆகியோருக்கு ரூ.45,000 பரிசுத் தொகையையும், முதல் பட்டதாரி பிரிவில் 192.5 கட்ஆப் பெற்று தேர்வு செய்த கணினித்துறை மாணவி ஹமிதா பேகத்துக்கு ரூ.25 ஆயிரம் பரிசையும், 191.25 கட்ஆப்புடன் சிவில்துறையைத் தேர்வு செய்த மாணவர் அஜித்குமாருக்கு ரூ.20 ஆயிரம் பரிசுத் தொகையையும் வழங்கினார்.
முன்னதாக, துணை முதல்வர் சிவக்குமார் வரவேற்றுப் பேசினார். முதலாமாண்டு டீன் ஜான்சிராணி நன்றி கூறினார்.
 விழாவில், மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.