Thursday, August 07, 2014
On Thursday, August 07, 2014 by Anonymous in Sports

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் முகமது யூனிஸ் கான் சதம் அடித்து அசத்தினார்.
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், அபாரமாக ஆடிய பாகிஸ்தானின் யூனிஸ் கான் சதம் அடித்தார். இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆரம்பத்தில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் பிரசாத் சிறப்பாக விளையாடினார்.
மன்சூர் (3), செஷாத் (4) இருவரையும் சொற்ப ரன்னில் வெளியேற்றி பாகிஸ்தானை அவர் திணறடித்தார். அடுத்து வந்த அசார் அலி 30 ரன்களில் ஆட்டமிழந்த்ர்.
இந்நிலையில் 4 ஆவது விக்கெட்டுக்கு அனுபவ வீரர்களான யூனிஸ் கான், கேப்டன் மிஸ்பா உல் ஹக் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுப்புடன் ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
இந்த ஜோடி 100 ரன் சேர்த்த நிலையில் மிஸ்பா உல் ஹக் (31) ஹெராத் சுழலில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய யூனிஸ் கான் டெஸ்ட் போட்டியில் தனது 24 சதத்தை பூர்த்தி செய்தார்.
இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் என்ற சாதனை படைத்துள்ள இன்சமாம் உல் ஹக்கை (25 சதம்) அவர் நெருங்கி உள்ளார்.
அவருடன் இணைந்து ஆடிய ஆசாத் ஷபிக் நல்ல ஒத்துழைப்பு தர முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் எடுத்தது. யூனிஸ்கான் 133, ஷபிக் 55 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
நெல்லை கோயிலில் நடிகர் கமல்ஹாசன் வரம்பை மீறி நடந்துகொண்டதால் மக்கள் கொந்தளித்துள்ளனர். நடிகர் கமல் தற்போது பாபநாசம் என்ற படத்தில் நடித்த...
-
அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், அந்தியூர் வட்டார வளமையம் சார்பில் ஆசிரிய –ஆசிரியைகளுக்கு தமிழ் ...
-
தூத்துக்குடியில் குடியிருப்பு பகுதியில் விபசாரம் நடத்தியதாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதியில்...
-
கோவை,: கோவை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்தவர் கற்பகம். இவர் நேற்று பணியிடம் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட...
-
வெங்கிட்டாபுரம் கிராமத்தில் மின்மயானம் அமைப்பதற்கு அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, பல...
-
அண்ணா பிறந்தநாளையொட்டி நடந்த சைக்கிள் போட்டியில் திருவள்ளுவர் அரசுப்பள்ளி மாணவ–மாணவிகள் பரிசுகளை பெற்றனர். அண்ணா பிறந்தநாள் சைக்கிள் போட்...
-
திருப்பூர் வடக்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா திருப்பூர் குமார்நகர் பகுதியில் ரோந்து சுற்றிவந்தார். அப்போது, பொதுமக்கள் அதிகம் கூடும் பக...
-
இத்தாலிய நகரமான மிலனில் உள்ள நீதி அரண்மனை என்று அழைக்கப்படும் நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் நீதிபதி ஒருவரும், வழக்கறிஞர் ஒருவர...