Wednesday, August 06, 2014

On Wednesday, August 06, 2014 by Unknown in , ,







திருப்பூர், ஆக.5-
ஜெயலலிதா ஆட்சிக்கு வரும்போது திருப்பூர் மக்களுக்கு திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார் என அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கூறினார்.
  திருப்பூர் மாநகர மாவட்ட அண்ணா தி.மு.க.,மற்றும் ஜெயலலிதா பேரவை சார்பில் அரசின் மூன்றாண்டு சாதனைகளை விளக்கிடும் 100 வாரங்களின் தொடர் சாதனை விளக்க மக்கள் முகாமின் 2-ம் வாரக்கூட்டம்  திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், கௌமாரியம்மன் கோவில் அருகில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கலைமகள் கோபால்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். கவுன்சிலர்கள் எம்.முருகசாமி, சி.கணேஷ், மற்றும் இளைஞர் அணி ஹரிஹரசுதன், பாசறை யுவராஜ் சரவணன் உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
                                                    -:அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன்:- 
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநகர் மாவட்ட கழக செயலாளரும், வனத்துறை அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்  ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கியும் பேசியதாவது:-
தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டு காலமாக சிறப்பான ஒரு ஆட்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்.தமிழக மக்களுக்கு அவர் அளித்துள்ள சரித்திர சாதனை திட்டங்களை மக்கள் வசிக்கும் பகுதிகளில் நேரில் சென்று எப்படிப்பட்ட திட்டங்களை கொடுத்து இருக்கிறார், அந்த திட்டங்கள் மக்களுக்கு வந்து சேர்ந்ததா, அந்த திட்டங்களை மக்கள் பயன்படுத்துகிறார்களா   என்பதனை விளக்கிடும் வகையில் மக்கள் முகாம் மூலமாகவும், தெருமுனை பிரச்சார கூட்டங்கள் மூலமாகவும், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் , மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. இது போன்ற கூட்டங்கள் நடத்துவது மூலம் மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு, அவர்களது குறைகளை கேட்டு அவற்றை களையும் வாய்ப்பும் ஏற்படுகிறது.எத்தனையோ தலைவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு இருக்கிறார்கள்.எத்தனை திட்டங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பக்த்டு இருக்கிறது.இந்த 3 ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தமிழக மக்களுக்காக எத்தனை திட்டங்களை தந்துள்ளார் என்பதை மக்கள் மறந்திருக்க மாட்டர்கள்
கடந்த கால தி.மு.க.ஆட்சியாளர்கள் கவர்ச்சியான திட்டங்களை வாக்குறுதியாக தந்து ஆட்சிக்கு வந்த அவர்களின் குடும்பங்கள் மட்டுமே பயனடைய திட்டங்கள்.கொண்டு வந்தனர்.இலவச கலர் டி.வி.தருகிறோம் எனகூறி கேபிள் கனெசனுக்கு ரூ.150 ஐ மக்களிடம் வாங்கினார்கள். அந்த பணம் கருணாநிதியின் பேரன் தயாநிதிமாறனுக்கு சென்றது.கருணாநிதி ஆட்சியில் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு திட்டங்களையும் தரவில்லை. ஆனால் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில், எந்த ஒரு திட்டங்களும் மக்களிடம் நேரிடையாக சென்றடையும் வகையில் அவற்றை தந்து கொண்டு இருக்கிறார். மக்களின் குறைகளை போக்கும் வகையில் மக்கள் மீது அக்கறை கொண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் இந்தியாவில் முதன்மை முதலமைச்சராக திகழ்ந்து வருகிறார்.
திருப்பூரின் பனியன் தொழில் கடந்த தி.மு.க.ஆட்சியில் முடக்கப்பட்டு கேள்விக்குறியாக இருந்தது. தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவர்களின் சொந்த ஊருக்கு சென்று விடும் நிலை. தொழில் அதிபர்கள் அவர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்தனர். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற 3-வது நாளில்  பனியன் தொழிலுக்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில் வட்டியில்லா கடனாக ரூ.200 கோடியை கொடுத்தார். இன்று பனியன் நிறுவனங்களில் வேலை இருந்தும் ஆட்கள் பற்றாக்குறை என்கின்ற நிலையில் உள்ளது.அதே போல் கடந்த ஆட்சியாளர்கள் திருப்பூர் மாவட்டம் என்று பெயரளவுக்கு மட்டுமே வைத்து இருந்தனர். முதல்வர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் ரூ.103 கோடியை ஒதுக்கீடு செய்து இன்று அவை பெருந்திட்ட வளாகமாக கட்டபப்த்டு வருகிறது.மேலும் மாநகராட்சிக்கும் அந்தஸ்து அளிக்கும் வகையில் 60 வார்டுகளாக உருவாக்கி முழுமையான மாநகராட்சியாக செயல்படும் வகையில் ரூ.350 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு வளர்ச்சி பணிகளை மக்களுக்கு செய்து தர உத்தரவிட்டுள்ளார். தமிழக முதல்வராக ஜெயலலிதா எப்போது எல்லாம் ஆட்சிக்கு வந்தாலும் திருப்பூர் பகுதி மக்களுக்கு நல்ல பல திட்டங்களை தந்து கொண்டு இருக்கிறார். இப்படி எண்ணற்ற திட்டங்களை வழங்கி வரும் முதல்வருக்கு நீங்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணை செயலாளரும்,திருப்பூர் மேயருமான அ.விசாலாட்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளரும், துணை மேயருமான சு.குணசேகரன், வடக்கு தொகுதி செயலாளர் ஜெ.ஆர்.ஜான், தெற்கு தொகுதி செயலாளர் தம்பி மனோகரன், தலைமை கழக பேச்சாளர் முகவை கண்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் கருவம்பாளையம் மணி, கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, மார்க்கெட் சக்திவேல், அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஸ்டீபன்ராஜ், வடக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அட்லஸ் சி.லோகநாதன்  உஷா ரவிக்குமார்,, எஸ்பி.என்.பழனிசாமி, டி.பார்த்திபன்,புலுவபட்டி பாலு, வளர்மதி கருணாகரன்,சாகுல்ஹமீது, தாமோதரன்,கே.பி.ஜி.மகேஸ்ராம், வி.எம்.கோகுல், பெரிச்சிபாளையம் ஈஸ்வரமூர்த்தி, சின்னு, ரத்தினகுமார்,ரஞ்சித் ரத்தினம்,அசோக்குமார்,ரகுநாதன், ராஜகோபால், மயில்ராஜ், கேபிள் பாலு, நீதிராஜன்,பாசறை லோகநாதன், பரமராஜன்,டி.ஆர்.சந்திரன், பாஸ் என்கிற பாஸ்கரன், தலைமை கழக பேச்சாளர்கள், உள்ளாட்சி மன்ற, கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மாவட்ட பேரவை துணை செயலாளர் என்.ராஜேஷ்கண்ணா நன்றி கூறினார்.