Thursday, August 07, 2014

On Thursday, August 07, 2014 by Unknown in , ,




திருப்பூர்  மாவட்டம்  காங்கயம்  காவல்நிலைய  சரகத்திட்குட்பட்ட  கொடுவாய்  ஏர்செல்  நிறுவனத்தின்  விநியோகஸ்தர்  ஏர்வாய்ஸ்  மொபைல்ஸ்  நிறுவனத்தின்  உரிமையாளரான  சம்பத்  35. த/பெ .ராமசாமி  என்பவர்  தன்னிடம்   ஏர்செல்  சிம்கார்டு  பொருட்டு  வின்ணப்பம்  செய்த  அதே  பகுதியை  சேர்ந்த நபர்களிடம்  அடையாள  அட்டை  மற்றும்  விண்ணப்ப  படிவங்களை  பெற்றவர் . விண்ணப்பித்த  நபர்களுக்கு  தெரியாமலயே  அவர்களின்  விண்ணப்பம்  போல் போலியாக  தயாரித்து  அவற்றை  உண்மை  ஆவணங்களாக  ஏர்செல்  நிறுவனத்தில்  கொடுத்து 13 சிம்கார்டுகளை  பெற்று  அவற்றை  வெவ்வேறு  நபர்களுக்கு  விற்று  மோசடி  செய்துள்ளார் .  இது  சம்மந்தமாக  கிருஷ்ணன்  43 .த/பெ . பெரியசாமி  என்பவர் . கொடுத்த  புகாரின்  பேரில்  மாவட்ட  காவல்  கண்காணிப்பாளர் . திரு . அமித்குமார் சிங் .இ .கா .ப  அவர்களால்  விசாரணை  மேற்கொள்ள  உத்தரவிடப்பட்டது .  விசாரணையில்  மோசடி  செய்துள்ளது . உண்மை  என  தெரிய  வரவே  மேற்கண்ட  எதிரி  சம்பத்  என்பவரை  கைது  செய்து  நீதிமன்ற   காவலுக்கு  உட்படுத்தப்பட்டது .