Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
சிக்மகளூரில் உள்ள மத்திய சிறை வளாகத்தில் கைதி, பெண்ணுடன் ‘செக்ஸ்’ லீலையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிக்மகளூர் டவுன் ரத்னகிரி பகுதியில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் ஏராளமான தண்டனை பெற்ற குற்றவாளிகளும், விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சட்டவிரோதமாக செல்போன்கள், கஞ்சா, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
இதைத்தொடர்ந்து கடந்த 15 நாட்களுக்கு முன்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சஞ்ஜீவ் பட்டீல் தலைமையில் போலீசார், சிக்மகளூர் மத்திய சிறையில் கைதிகள் தங்கியுள்ள அறைகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செல்போன்கள், சிம்கார்டுகள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள், சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களும் சிக்கியது.

அதையடுத்து சிக்மகளூர் மத்திய சிறையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கைதிகள் அறைகளை தீவிரமாக கண்காணிக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், சிக்மகளூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூடிகெரேயை சேர்ந்த 27 வயதான கொலை கைதி ஒருவர், தன்னை பார்க்க வந்த பெண்ணுடன் கடந்த சில நாட்களாக சிறை வளாகத்திலேயே ‘செக்ஸ்’ லீலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் நேற்று முன்தினம் ஊடகங்களில் வெளியானது. மேலும் இதுபோன்று கைதிகளின் ‘செக்ஸ்’ லீலைகளுக்கு சிறையில் உள்ள ஒரு சில அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட சிறைத்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுநல அமைப்பினரும், பொதுமக்களும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
ஏற்கனவே சிக்மகளூர் மத்திய சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்திருந்த நிலையில், கைதி ஒருவர், பெண்ணுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட சம்பவம் சிக்மகளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: