Saturday, August 30, 2014

On Saturday, August 30, 2014 by farook press in ,    
ளஸ்-2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை கோவை மண்டல துணை இயக்குனர் ஜோ.லூர்து சகாயராணி அறிவித்து உள்ளார்
தனித்தேர்வர்களுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு வருகிற செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்காக தனித்தேர்வர்களிடம் இருந்து இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அப்போது விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் தட்கல் முறையில் (சிறப்பு அனுமதி திட்டம்) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தனியார் இணையதள மையங்களில் விண்ணப்பிக்க முடியாது. இதற்காக கல்வி மாவட்டம் வாரியாக அரசு தேர்வுகள் துறை சார்பில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் விவரம் ஷ்ஷ்ஷ்.௴ஸீபீரீமீ.வீஸீ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தனித்தேர்வர்கள் சிறப்பு மையங்களுக்கு சென்று வருகிற செப்டம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் பற்றிய விவரங்கள் பதிவு சீட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அத்துடன் தட்கல் கட்டணமாக ரூ.1,000, பதிவு கட்டணமாக ரூ.50 ஆகியவற்றை சிறப்பு மையங்களில் செலுத்த வேண்டும்.
தனித்தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதி சான்றிதழ் (பள்ளியில் படிக்கும் பொதுத்தேர்வு எழுத தவறவிட்டவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ், வெளிமாநிலத்தவர்களாக இருந்தால் இடப்பெயர்வு சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

0 comments: