Saturday, August 09, 2014
On Saturday, August 09, 2014 by Anonymous in history
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு - ஒரு வரலாற்றுப் பார்வை
1142 ஆண்டுகள் இந்தியத் திருநாட்டை முஸ்லிம்கள் ஆட்சி செய்துள்ளனர். முகலாய சக்கரவர்த்திகளின் காலத்தில் இந்திய துணை கண்டமே அவர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.
ஆயினும் 592 ஆண்டுகள் முஸ்லிம் மன்னர்களுக்கு தலைநகராக இருந்த டெல்லி உட்பட இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக இருப்பது மட்டுமின்றி கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அனைத்திலும் பின்தங்கியுள்ளனர்.
ஆக முஸ்லிம் மன்னர்கள் முஸ்லிம்களுக்காக ஆளவும் இல்லை; இஸ்லாத்தை பரப்புவது அவர்கள் நோக்கமும் இல்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
முஸ்லிம் லீக் உருவாக்கப்பட்டது ஏன்?
1600 டிசம்பர் 31
பேரரசர் அக்பர் ஆட்சி செய்து கொண்டிருந்த போதுதான் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது.
1799 மே 4 மைசூர் போரில் மாவீரன் திப்பு சுல்தானின் வீரமரணத்தை அடுத்து 1806 ஜுலை 10ல் வேலூரில் நடைபெற்ற சிப்பாய் புரட்சிதான் ஆங்கில ஏகாதி பத்தியத்தை விரட்டும் இந்திய சுதந்திர வேட்கைக்கு அடித்தளம் அமைத்தது.
1857 - இந்திய வரலாற்றில் திருப்புமுனை ஆண்டு! முகலாயப் பேரரசர் பஹதூர்ஷா தலைமையில் முதல் சுதந்திரப் போர் வெடித்தது.
அக்கிளர்ச்சி அடக்கப்பட்டு பஹதூர்ஷா கைது செய்யப்பட்டதும் இது இந்தியர்களின் உள்ளத்தில் தேசிய உணர்வை கொளுந்து விடச் செய்தது.
கிளர்ச்சி அடக்கப்பட்டதும் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆதிக்கம் விக்டோரியா மகாராணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
1858 நவம்பர் 1 - அலகாபாத்தில், விக்டோரியா மகாராணியின் அறிக்கையை கவர்னர் ஜெனரல் கானிங் பிரபு சமர்ப்பித்தார்.
ஆங்கிலேயர்களைப் போல் இந்தியர்களும் சமமாக நடத்தப்படுவர்; மதவிஷயங்களில் அரசு தலையிடாது; கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு பொது மன்னிப்பு என உறுதி கூறப்பட்டது.
1861-ல் ’இந்தியன் கவுன்சில் ஆக்ட்’ என்ற பெயரில் ஆங்கிலேயர் வெளியிட்ட சட்டப்படி, கவர்னர் ஜெனரல் சபையில் பாதியிடம் இந்தியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் இவை அனைத்தும் முஸ்லிம்கள் விஷயத்தில் பொய்த்துப் போனது.
முதல் சுதந்திரப் போரை முஸ்லிம்கள் முன்னின்று நடத்தினார்கள் என்பதற்காக ஆங்கிலேயர்களால் பழிவாங்கப்பட்டனர்.
அனைத்து பதவிகளிலிருந்தும் ராணுவத்திலிருந்தும் முஸ்லிம்கள் நீக்கப்பட்டனர். அவர்களின் சொத்தில் மூன்றில் ஒரு பங்கு தண்டமாக அபகரிக்கப்பட்டது. மத்ரஸாக்கள் நசுக்கப்பட்டன.
இதனால் பொருளாதாரம் கல்வி - வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கினர்.
ஆங்கிலேயர் மீது கோபத்திலும் ஆங்கிலம் கற்பது ஹராம் என்ற நிலையிலும் முஸ்லிம்கள் இருந்த போது -
1884-ல் வைசி ராயாக இருந்த டஃபரின்பிரபு மக்களுக்கும் அரசுக்கும் இணைப்பு பாலமாக இருக்கும் அமைப்பை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.
அவரது ஆலோசனையின்படி 1885 டிசம்பர் 28-ல் யு.எஸ். பானர்ஜி தலைமையில், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயே அதிகாரி இந்திய தேசிய காங்கிரஸை உருவாக்கினார்.
காங்கிரஸின் முதலாவது மாநாட்டில் இந்திய அரசு ஊழியர் அனைவரும் இந்தியர் மயமாக்கப்பட வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டிருந்தது
ஆனால் அதன் பலன் முற்பட்ட சமூகத்தை மட்டுமே சென்றடைந்தது.
இதைப்பற்றி தீவிரமாக சிந்தித்தார் சர் சையத் அகமத்கான். முஸ்லிம்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முஸ்லிம் கல்வி மாநாட்டை உருவாக்கினார். 1886ல்-ம் ஆண்டில் அலிகரில் முஹம்மடன் ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை தொடங்கினார். இதுவே பின்னாளில் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகமாக வளர்ந்தது.
ஆங்கிலேயர் பிரித்தாளும் சூழ்ச்சியை ஏற்படுத்தினர் . இதனால் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவாயின.
1894-ல் சர் சையத் அகமத்கான், நவாப் முஹ்ஸினுல் முல்க் ஆகியோர் முஸ்லிம் பொலிடிகல் அஸோஸியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினர். <br><br>
1906-ம் ஆண்டு மின்டோ பிரபு இந்தியாவின் வைஸ்ராயாக இருந்தார். அச்சமயம் பிரிட்டனில் இந்திய விவகார அமைச்சராக இருந்த மார்லி பிரபு இந்தியாவில் சீர்திருத்தங்கள் செய்யப்பட இருப்பதை அறிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இடஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்க முஸ்லிம்கள் திட்டமிட்டனர்.
1906 அக்டோபர் 1ல் சிம்லாவில் தங்கியிருந்த மிண்டோ பிரபுவை சர் ஆகாகான் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இவை நிச்சயம் பரிசீலிக்கப்படும் என வைஸ்ராய் உறுதி அளித்தார்.
சிம்லா தூதுக்குழுவின் முக்கியதுவத்தை உணர்ந்த நவாப் சலீமுல்லாஹ் கான் 1906 நவம்பர் 6 அன்று ஒரு அறிக்கை வெளியிட்டார். முஸ்லிம்களுக்கு தனி அரசியல் அமைப்பு வேண்டியதன் அவசியத்தை அதில் அவர் உணர்த்தியிருந்தார்.
அகில இந்திய முஸ்லிம் லீக் உதயம் 1906 டிசம்பர் 30
இன்றைய வங்க தேச தலைநகர் டாக்காவில் நவாப் வாக்காருல் முல்க் தலைமையில் அகில இந்திய முஸ்லிம் கல்வி மாநாடு கூட்டப்பட்டது.
முஸ்லிம்களின் நலன்களை பாதுகாக்க ஓர் அரசியல் கட்சி வேண்டும் என்ற கோரிக்கையை நவாப் சலீமுல்லா கான்இக்கூட்டத்தில் வலியுறுத்தினார்.
அது அனைவராலும் ஏற்கப்பட்டது. இதற்கான முறைப்படி தீர்மானத்தை டில்லி ஹக்கீம் அஜ்மல் கான் முன் மொழிந்தார். நவாப் முஹ்ஸினுல் முல்க் வழிமொழிந்தார்
"அகில இந்திய முஸ்லிம் லீக்’’ அன்று உதயமானது.
1906 டிசம்பர் 31
1906 டிசம்பர் 31
அகில இந்திய முஸ்லிம் லீகின் முதல் கூட்டம் நவாப் வக்காருல் முல்க் தலைமையில் நடைபெற்றது.
சர் சுல்தான் முஹம்மது ஷாஹ் ஆகாகான் தலைவராகவும், நவாப் முஹ்ஸினுல் முல்க், நவாப் வக்காருல் முல்க் ஆகியோர் பொதுச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
முஸ்லிம் லீகிற்கு சட்டதிட்டங்கள் அமைக்க மௌலான முஹம்மதலி ஜவஹர் அவர்களை பொறுப்பாளாராக்க கொண்டு குழு அமைப்பட்டது.
இளம்பிறையும், ஜந்து முனை கொண்ட நட்சத்திரம் இடதுபுற மூலையில் பதிக்கப்பட்ட பச்சிளம் பிறைக் கொடி முஸ்லிம் லீகின் கொடியாக வடிவமைக்கப்பட்டது.
1907 டிசம்பர் 29ல் கராச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் முதலாவது மாநாட்டில் கல்வி வேலை வாய்ப்பில் முஸ்லிம் சமுதாயத்தின் பின் தங்கிய நிலை பற்றி பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
1908 மார்ச் 18-ல் அலிகரிலும், டிசம்பர் 30,31 அமிர்தரஸிலும் நடைபெற்ற மாநாடுகளில் நீதித்துறை, அரசுப்பணிகள், கல்வி, பாடநூல் குழு, உள்ளாட்சி அமைப்புகள், வைஸ்ராய் மற்றும் மாகான ஆளுனர்களின் ஆலோசனை கமிட்டிகளில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரப்பட்டது.
இதன் விளைவாக கிடைக்கப் பெற்றதே ’மிண்டோ -மார்லி சீரிதிருத்தம்’ என்ற 1909-ம் ஆண்டு இந்தியன் கவுன்ஸில் சட்டம்.
1913 அக்டோபர் 10-ல் முஸ்லிம் லீகில் சேர்ந்த ’காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாஹ் 1935-ல் தான் அதன் நிரந்தர தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1921 டிசம்பர் அஹமதாபாத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீகின் 14வது மாநாட்டில் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானம் ஹஸரத் மோகானி அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. <
1940 மார்ச் 23-ல் லாகூர் மாநாட்டில்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடமேற்கு, வடகிழக்கு மாகானங்கள் தனி ராஜ்யமாக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அதையும் 1946 ஜுன் 6 ல் நடந்த கூட்டத்தில் கைவிட முடிவு செய்யப்பட்டது.
இந்திய சுதந்திர போராட்டமும் பிரிவினை கோரிக்கையும் உச்ச கட்டத்தை எட்டின.
1947 மார்ச் 24-ல் மவுண்ட் பேட்டன் பிரபு இந்திய வைஸ்ராயாக பதவி ஏற்றதும் தேசப்பிரிபினைக்கான செயல் வடிவம் தீட்டப்பட்டது. இதற்கான பொறுப்பு வி.பி. மேனனிம் ஒப்படைக்கப்பட்டது.
வி.பி. மேனன் தயாரித்த திட்டத்தை பிரிட்டிஷ் அரசு ஏற்றது 1947 ஜுன் 2ம் தேதி டெல்லி வைஸ்ராய் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் நேரு, பட்டேல், ஆச்சசார்ய கிருபளானி ஆகியோர் காங்கிரஸ் சார்பிலும்,
முஹம்மதலி ஜின்னாஹ், லியாகத் அலிகான், அப்துர் ரவூப் நிஷ்தார் ஆகியோர் முஸ்லிம் லீக் சார்பிலும் பல்தேவ்சிங் சீக்கியர் சார்பிலும் ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டனர்.
1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா சுதந்திரமடைந்தது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோற்றமும் காயிதே மில்லத் தலைமையும்
1896 ஜுன் 5ல் திருநெல்வேலி பேட்டையில் பிறந்த காயிதெ மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில சாகிப் 1937-ல் முஸ்லிம் லீகில் உறுப்பினரானார் 1936-ல் மதராஸ் ஜில்லா முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1945-ல் மதராஸ் மாகான சட்டசபைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்கட்சி தலைவரானார். அதே ஆண்டு மதராஸ் மாகான முஸ்லிம் லீக் தலைவரானார்.
சுதந்திரத்திற்குப்பின் அகில இந்திய முஸ்லிம் லீக் கவுன்ஸிலின் கடைசிக் கூட்டம் 1947 டிசம்பர் 13,14 தேதிகளில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலுள்ள பந்தர் ரோடு காலிக்தினா ஹாலில் நடைபெற்றது. <br><br>
காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்தியாவிலிருந்து காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப், கே.டி.எம். அஹமது இப்ராகீம் சாகிப் எம்.எல்.சி, மலபார் சீதி சாகிப் எம்.எல்.ஏ, என்.எம். அன்வர் சாகிப், ஏ.கே. ஜமாலி சாகிப் எம்.எல்.ஏ ஆகிய ஐவர் கலந்து கொண்டனர்.
1906-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ’அகில இந்திய முஸ்லிம் லீக்’ இக்கூட்டத்துடன் நிறைவுபடுத்தப்பட்டது.
வரும் காலத்தில் முஸ்லிம் லீக் பற்றி இந்தியா, பாகிஸ்தானில் உள்ள கவுன்ஸில் உறுப்பினர்கள் தனித்தனியாக முடிவு செய்து கொள்ள வேண்டுமென முடிவெடுக்கப்பட்டு, தனித்தனி கன்வீனர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலிகான் பாகிஸ்தானுக்கான கன்வீனராகவும், காயிதெ மில்லத் இந்தியாவிற்கான கன்வீனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1948 மார்ச் 10 புதன்கிழமை காலை 10 மணி
சென்னை அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் இந்தியாவில் உள்ள முஸ்லிம் லீக் கவுன்ஸிலர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.
10 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு காயிதெ மில்லத் தலைமை வகித்தார்கள்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற புதிய பெயரில் புதிய சட்ட திட்டங்கள், நடைமுறைகளுடன் புதிய அமைப்பாக செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது.
காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் தலைவராகவும், மஹபூப் அலி பேக் சாகிப் எம்.எல்.ஏ, செயலாளராகவும், பம்பாய் ஹஸன் அலி பி. இபுராகீம் சாஹிப் எம்.எல்.ஏ. பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். <br><br>
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் முதல் நிகழ்ச்சியாக 1948-ல் திருச்சியில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது திருச்சி நகர் மன்றம் காயிதெ மில்லத்திற்கு வரவேற்பளித்தது.
1949 மலபார் புதுநகரத்தில் மாபெரும் மாநாடு நடைபெற்றது 1951 -ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு நடைபெற்றது. 1952 பொதுத் தேர்தலில் மலபார் பகுதியிருந்து ஐந்து எம்.எல்.ஏக்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வெற்றி பெற்றனர்.
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் 24.05.1946 முதல் 27.10.1951 வரை மதராஸ் மாகான சட்டசபையிலும் 5.11.1948 முதல் 26.11.1949 வரை இந்திய அரசியல் நிர்ணய சபையிலும், 1952 முதல் 1958 வரை நாடாளுமன்ற ராஜ்ய சபையிலும் உறுப்பினராக இருந்து சேவையாற்றியுள்ளார்கள்.
1962, 1967, 1971 ஆகிய மூன்று முறை கேரள மாநில மஞ்சேரி தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச் சிறப்பான சேவையாற்றினார்கள்.
மூன்று முறையும் தொகுதிக்குச் சென்று ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்யாமலேயே வெற்றி பெற்று சாதனை படைத்தார்கள்.
1962 ல் திருச்சி காட்டூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூடி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தது.
காயிதெ மில்லத் தலைவராகவும், கே.டி.எம். அஹமது இபுராகீம் சாகிப் பொதுச் செயலாளராகவும், டி.ஏ.எஸ். அப்துல் காதர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
காயிதே மில்லத் மறைவிற்குப் பின் தலைவர்கள்
1972 ஏப்ரல் 5ல் காயிதெ மில்லத் மரணமடைந்தார்கள்.
அதே ஆண்டு மே 14-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு சென்னையில் கூடி கேரள மாநிலம் பானக்காடு சையத் அப்துர் ரஹ்மான் பாபக்கி தங்ஙள் அவர்களை தலைவராக தேர்வு செய்தது.
தமிழகத் தலைவராக கே.எஸ். அப்துல் வகாப் ஜானி சாகிப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1973-ம் ஆண்டில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி சென்றிருந்த போது பாபக்கி தங்ஙள் புனித மக்காவில் காலமானார்கள்.
அவர்கள் மறைவிற்குப்பின் ’மஹ்பூபே மில்லத்’ இபுராஹீம் சுலைமான் சேட் அவர்கள்அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்து எர்ணாகுளத்தில் தொழில் செய்து வந்த சுலைமான் சேட் சாகிப் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள்.
தாய்ச்சபைக்கு 21 வருடங்கள் தலைவராக இருந்த அவர்கள் 27.04.2006-ல் மரண மடைந்தார்கள்.
1933 ஆகஸ்ட் 15-ல் மராட்டிய தலைநகர் மும்பையில் பிறந்த முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப் 1962-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இணைந்தார் 1967-77-ம் ஆண்டுகளில் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் கேரள மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மக்களைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேட் சாகிப் காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராகவும் அவரை தொடர்ந்து தலைவராகவும் பணியாற்றிய பனாத்வாலா சாகிப் 25.06.2008-ல் மரணமடைந்தார்.
1973-ம் ஆண்டில் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற சவூதி சென்றிருந்த போது பாபக்கி தங்ஙள் புனித மக்காவில் காலமானார்கள்.
அவர்கள் மறைவிற்குப்பின் ’மஹ்பூபே மில்லத்’ இபுராஹீம் சுலைமான் சேட் அவர்கள்அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிறந்து வளர்ந்து எர்ணாகுளத்தில் தொழில் செய்து வந்த சுலைமான் சேட் சாகிப் 6 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்கள்.
தாய்ச்சபைக்கு 21 வருடங்கள் தலைவராக இருந்த அவர்கள் 27.04.2006-ல் மரண மடைந்தார்கள்.
1933 ஆகஸ்ட் 15-ல் மராட்டிய தலைநகர் மும்பையில் பிறந்த முஜாஹிதே மில்லத் குலாம் மஹ்மூது பனாத்வாலா சாகிப் 1962-ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் இணைந்தார் 1967-77-ம் ஆண்டுகளில் மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
1971 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2004 வரையிலும் கேரள மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மக்களைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சேட் சாகிப் காலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராகவும் அவரை தொடர்ந்து தலைவராகவும் பணியாற்றிய பனாத்வாலா சாகிப் 25.06.2008-ல் மரணமடைந்தார்.
சிராஜுல் மில்லத்
1926 அக்டோபர் 4ல் காரைக்காலில பிறந்த சிந்தனைச் செல்வர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ்ஸமத் 1959ல் சென்னை மாநாகராட்சி உறுப்பினராகவும் 1964-76 வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் 1980-85, 1989-90ல் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் 1985-88ல் தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து அரிய பணி செய்தார்.
1973 முதல் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவராக இறுதி காலம் வரையிலும் பணியாற்றினார்கள் பனாத்வாலா சாகிப் தலைவராக இருந்தபோது அகில இந்திய பொதுச் செயலாளராகவும் பொறுப்பேற்று பணி செய்தார்கள். <
1999 ஏப்ரல் 11 அன்று காலமானார்கள்.
காயிதெ மில்லத் மறைவிற்குப்பின் 1972ல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில தலைவராக பொறுப்பேற்ற காயிதெ மில்லத் கே.எஸ். அப்துல் வகாப் ஜானி சாகிப் 1975 வரை அப்பதவியில் இருந்தார்கள்.
1962 முதல் 1974 வரை 18 வருடங்கள் தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார்கள்.
பன்னூலாசிரியர் ஏ.கே.ரிபாயி சாகிப் (Ex.M.P.,)), பன்மொழிப்புலவர் எம்.ஏ. லத்தீப் சாகிப்((Ex.MLA),நாவலர் ஏ.எம்.யூசுப் சாகிப் எஸ்.ஏ. காஜா முஹ்யத்தீன் சாகிப் (Ex.M.P.,), பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிப்,கே.ஏ. வகாப் சாஹிப் ((Ex.MLA), டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் ஆகியோரும் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளனர்.
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் மறைவிற்குப் பின் 12-04-1999 அன்று சென்னை புதுக்கல்லூரி அப்துல் சுக்கூர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் கிராமத்தில் 1940 ஜனவரி 5ம் தேதி பிறந்த பேராசிரியர் 1956 பள்ளி பருவத்திலேயே திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி வரலாற்றுதுறை தலைவராக பணியாய்றியபோது கட்சித் தலைமையின் ஆணையை ஏற்று அப்பதவியைத் துறந்து 1980ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்.
2004 மே 10ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரும்பணியாற்றியவர்.
11.07.2009 முதல் தமிழ்நாடு மாநில பொதுச் செயராளராக கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பணி செய்து வருகிறார். 10-09-2011 முதல் மாநில பொருளாளராக இராமநாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான் பணி செய்கிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து சொல்லின் செல்வர் ரவண சமுத்திரம் எம்.எம். பீர் முகம்மது (மேலப்பாளையம்), டாக்டர் ஹபீபுல்லாஹ் பேக் (சென்னை துறைமுகம்), எம்.அப்துல் கபூர் (ராணிப்போட்டை)
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநிலத்திலிருந்து சொல்லின் செல்வர் ரவண சமுத்திரம் எம்.எம். பீர் முகம்மது (மேலப்பாளையம்), டாக்டர் ஹபீபுல்லாஹ் பேக் (சென்னை துறைமுகம்), எம்.அப்துல் கபூர் (ராணிப்போட்டை)
தளபதி திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (சென்னை துறைமுகம்), எம்.ஏ. லத்தீப் ( வாணியம்பாடி), வி.எம். அப்துல் ஜப்பார் (அரவக்குறிச்சி), கே.ஏ. வஹாப் ( ராணிப்பேட்டை), எஸ். கோதர் மொகிதீன் (மேலப்பாளையம்), எம். அபுசாலிஹ் (புவனகிரி) ஆகியோரும்
1980ல் ஏ. ஷாஹுல் ஹமீது (கடையநல்லூர்), ஏ.கே.ஏ. அப்துஸ் ஸமத் (திருவல்லிக்கேணி), வி.எஸ்.டி. சம்சுல் ஆலம் (பாளையங்கோட்டை), எம்.ஏ. கலீலுர் ரஹ்மான் (அரவாக்குறிச்சி), எச். அப்துல் பாஸித் ( வாணியம்பாடி), ஆகியோர் சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக மதுரை எஸ்.எம். ஷரீப் (பெரியகுளம், இராமநாதபுரம்) அவர்களும், ஏ. கேரிபாயி சாகிப், எஸ்.ஏ. காஜா முகைதீன் சாகிப் ஆகியோர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பிர்களாகவும்
வடகரை எம்.எம்.பக்கர் ஜெ.எம். மியாகான் ஆகியோர் சட்டமன்ற மேலவை உறுப்பினர்காளகவும் பதவி வகித்தவர்கள்.
2009 நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வேலூர் தொகுதியில் எம். அப்துல் ரஹ்மான் போட்டியிட்டு வெற்றி அரும்பணியாற்றி வருகின்றார்.
2011 வருடம் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து, தனிச்சின்னத்தில் போட்டியிட்டு 123 இடங்களில் வெற்றி வாகை சூடியது.
முன்மாதிரி கேரளா மாநிலம்
கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திகழ்ந்து வருகின்றது. பி. போக்கர் சாகிப், காயிதே மில்லத், இப்ராம்ஹிம் சுலைமான் சேட், கேரள கேசரிசி.எச். முஹம்மது கோயா, ஹமீது அலி சாம்னாட், குலாம் முஹம்மது பனாத்வாலா, பி.வி. அப்துல்லாஹ் கோயா கேரம்பாயில் அஹ்மது ஹாஜி, அப்துஸ் ஸமது சமதானி, பி.வி. அப்துல் வகாப் ஆகியோர் கேரள மாநிலத்திலிருந்து பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.
தற்போது கேரளாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக இ. அஹ்மது , இ.டி. முஹம்மது பஷீர், ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். தற்போது தலைவராக இருக்கும் இ. அஹ்மது சாகிப் 2004ம் ஆண்டு முதல் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்று அறப்பணியாற்றி வருகின்றார்.
கேரள முதல் அமைச்சராக சி.எச். முஹம்மது கோயா பணியாற்றி சாதனை படைத்துள்ளார். கேரள அரசில் முதல் அமைச்சர் பதவி முதல் பல்லாண்டு காலமாக துணை முதல்வர், சபாநாயகர், துணை சபாநாயகர், அரசு கொரடா, பல துறைகளில் அமைச்சர்கள், பல்வேறு வாரியங்களில் தலைவர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பணியாற்றி வருகின்றனர். கேரள அரசியல் சி.எச். முஹம்மது கோயா, இ.டி. முஹம்மது பஷீர் ஆகியோர் கல்வி அமைச்சர்களாக பொறுப்பேற்ற காலத்தில்தான் 5 பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டுள்ளது வரலாற்று சாதனையாகும்.
1958ம் ஆண்டே முஸ்லிம்களுக்கு கல்வி-வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு பெற்ற முதல் மாநிலம் கேரளம்.
அரபி மொழி தனித்துவம் பெற்று பல்வேறு அரபிக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்களோடு இணைக்கப்பட்டிருப்பதோடு உலமாக்கள் அரசு பணியில் இருப்பதும் கேரளாவில்தான். இப்படியாக இந்தியாவில் வாழும் முஸ்லிம்களில் எல்லா நிலைகளிலும் முன்னேற்றம் அடைந்தவர்களாக கேரள முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இதற்கு காரணம் அவர்கள் ஒன்றுபட்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருப்பதுதான் என்பது வரலாறு பாடமாகும்.
தற்போது பி.கே. குஞ்ஞாலிகுட்டி தலைமையில் 20 சட்டமன்ற உறுப்பினர்களையும், 5 அமைச்சர்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளையும், 10க்கும் மேற்பட்ட வாரியத் தலைவர்களை பெற்று வலுவான அமைப்பான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திகழ்ந்து வருகின்றது.
மற்ற மாநிலங்கள்
மேற்கு வங்காளம் முர்சிதாபாத் பாராளுமன்ற தொகுதியிலிருந்து அபூதாலிப் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி இருக்கின்றார். 1970ம் ஆண்டு மேற்கு வங்கத்தை ஆண்ட அஜய் முகர்ஜி அமைச்ரவையில் ஏ.கே.எம். ஹசனுஜ் ஜமான் உட்பட மூன்று அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.
உ.பி. விதர்பா அய்யூப்கான், அஸ்ஸாம் சிராஜுல் ஹக், மஹாராஷ்டிரா ஜி.எம். பனாத்வாலா உள்ளிட்டோரும், பாண்டிச்சேரி, காரைக்கால் சாலிஹ் மரைக்காயர், கர்நாடகா குல்பர்கா கமருல் இஸ்லாம் உள்ளிட்டோர் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.
புதுடெல்லி, மும்பை, பூனே பிவாண்டி, சென்னை, கல்லிக்கோட்டை, கொச்சின், நாக்பூர், குல்பர்கா உள்ளிட்ட மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.
அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு
சுதந்திர இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய அரசியல் இயக்கங்கள் தோன்றி மறைந்து விட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தாலும், சமுதாய பெருமக்களாலும் அனைத்து கட்சியாலும், மதிக்கப்படுவதோடு, கறைபடியாத அரசியல் இயக்கமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போற்றப்படுகின்றது. தேசிய ஒருமைப்பாட்டை காத்தல், சமய நல்லிணக்கத்தோடு வாழ்தல், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக முஸ்லிம்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாத்தல் என்ற லட்சியப்பணிகளில் தாய்ச்சபை தன்மை முழுமையான அர்ப்பணித்து சேவையாற்றி வருகின்றது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாற்றை ஒரு சில பக்கங்களில் எழுதிட முடியாது. முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை வெளியிடுகள் மூலம் படித்திடலாம்.
ஒன்று பட்டு உரிமைகளை வென்றிட வாரீர்! தாய்ச்சபையில் இன்றே இணைந்திடுவீர்!!
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
தமிழக-கேரள எல்லையில் உள்ள உடுமலை வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியுள்ளனரா என க்யூ பிரிவு போலீஸார், வனத் துறையினர் தீவிர விசாரணை...
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
திருச்சி தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய மண்டல சாலை மறியல் போராட்டம் நடை...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...