Saturday, August 09, 2014
திருப்பூர் ஆக 9: திருப்பூர் மாநகர காவல் ஆணையகரகம் தோற்றுவிக்கப்படும் முன்பு வரை ஏராளமான வழிப்பறி , திருட்டு கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகமாக இருந்தன . அப்போது போலீஸ் பற்றாக்குறை இருந்ததே காரணமாகும் . திருப்பூர் மாநகருக்கு என்று தனியாக போலீஸ் கமிஷ்னர் 2 துணை கமிஷ்னர்கள் 4 உதவி கமிஷ்னர்கள் மற்றும் 1000 க்கும் மேற்ப்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டனர் . இந்நிலையில் குற்ற சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக மாநகர போலீஸ் துறையுடன் ஸ்ரீபுரம் அறக்கட்டளை அமைப்பு கைகோர்த்து உள்ளது . இதை தொடர்ந்து போலீஸ் கமிஷ்னர் சேஷசாய் நிருபர்களிடம் கூறும்போது 1600 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த திட்டமிட்டுள்ளோம் . இதற்காக ஸ்ரீபுரம் அறக்கட்டளை பொதுமக்கள் பங்களிப்புடன் நிதி திரட்டி வருகிறது . முதற்கட்டமாக செரீப் காலனியில் 55 கேமரா பொருத்தப்படும் இதன் கட்டுப்பாடு முழுவதும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கேமரா இருக்கும் . பராமரிப்பு பணிகளை மட்டும் ஸ்ரீபுரம் அறக்கட்டளை மேற்கொள்ளும் . மாநகர பகுதியில் அணைத்து நிறுவனங்களிலும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் . இதற்காக இதற்காக தனி அரசானை உள்ளது . கண்காணிப்பு கேமரா பொருத்தாத நிறுவனங்களில் உரிமத்தை ரத்து செய்து அவற்றை சீல் வைக்க மாநகராட்சி ஆணையருக்கு அதிகாரம் உள்ளது . என்றார் . இந்த நிகழ்ச்சியில் போது சி ஐ ஐ அமைப்பின் தலைவர் ராஜா சண்முகம் , காவல் ஆய்வாளர்கள் முரளி [நுண்ணறிவு பிரிவு ] நெல்சன் [திருப்பூர் தெற்கு ] ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகிகள் விஜயகுமார் , ஆம்ஸ்ட்ராங் பழனிச்சாமி , சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர் .
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...

