Wednesday, August 20, 2014

On Wednesday, August 20, 2014 by Unknown in ,    




உடுமலை, : உடுமலையில் விடிய, விடிய கனமழை பெய்தது. பாதாள சாக்கடை திட்டத்துக்காக வீதிகள் தோறும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
உடுமலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு பெய்ய துவங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பொள்ளாச்சி-தளி ரோடு கார்னரில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தளி ரோடு, தாராபுரம் ரோடு, பழனி ரோடு, கல்பனா ரோடு, வ.உ.சி.வீதி உள்ளிட்ட அனைத்து வீதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் நகரில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக 33 வார்டுகளிலும் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் அதில் மழைநீர் தேங்கி மீண்டும் குழிகள் தோன்றின. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அதில் சிக்கி தவித்தனர். 
அதேப் போல் தாராபுரம் ரோடு, பாரதியார் நகரில் மழைநீர் புகுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் சைபுதின், நகராட்சி தலைவர் ஷோபனா, பொறியாளர் கண்ணையா, நகர்நல அலுவலர்(பொறுப்பு) இளங்கோ மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள பணிகளை துரிதப்படுத்தினர்.

0 comments: