Saturday, August 16, 2014

On Saturday, August 16, 2014 by Unknown in ,    
அரசுத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மதுரையை அடுத்த குன்னத்தூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அவர் பேசியது:
கிராமங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும். கிராமங்களின் மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தூய்மையான கிராமத்துக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.எந்தவொரு திட்டமாக இருந்தாலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே, சிறப்பாகச் செயல்படுத்த முடியும். நிலத்தடி நீர் குறைந்து வருவதால் மழைநீரைச் சேகரிக்க முன்வரவேண்டும். கல்வி என்பது அவசியத் தேவையாக இருக்கிறது. எனவே, அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயம் பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்றார். இதில், கூடுதல் ஆட்சியரும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநருமான பி. ரோகிணி ராம்தாஸ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் மதுமதி, சமூகநல அலுவலர் ஆனந்தவள்ளி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வசந்தி, கால்நடைப் பராமரிப்புத் துறை இணை இயக்குநர் கோபிநாத், குன்னத்தூர் ஊராட்சித் தலைவர் திருப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

0 comments: