Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    








உடுமலை, : உடுமலை இந்து மக்கள் கட்சி சார்பில் நிறுவப்படும் விநாயகர் சிலைகளை அமராவதி ஆற்றில் கரைப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
 விநாயகர் சதுர்த்தி விழா 29ம் தேதி நடக்க இருப்பதை முன்னிட்டு, அதை பாதுகாப்பாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் உடுமலை தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ. குணசேகரன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தாசில்தார்கள் சைபுதீன், சண்முகவடிவேல், ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் முத்துராமன் மற்றும் இந்து மக்கள் கட்சி (அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம், இந்து முன்னணி, ஜாபிசா பள்ளிவாசல், பீர்வீக பள்ளிவாசல் ஆகியவற்றின் நிர்வாகிகள், அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், ஆர்.டி.ஓ.குணசேகரன் பேசுகையில், விநாயகர் சிலைக்கு எவ்வித ரசாயன கலவையையும் பூசக்கூடாது, சிலை பாதுகாப்புக்கு 15 பேர் கொண்ட கமிட்டி அமைத்து எப்போதும் 5 பேர் பாதுகாப்பில் இருக்க வேண்டும். நிர்ணயித்த பாதையில் தான் விஜயதர்சன ஊர்வலம் நடத்த வேண்டும் என்றார்.
மேலும், கூட்டத்தில் வரும் 31ம் தேதி உடுமலை குட்டைத்திடலில் இருந்து விநாயகர் சிலைகளை ஊர்வலமாக மடத்துக்குளம் எடுத்து சென்று அமராவதி ஆற்றில் கரைப்பது என இந்து மக்கள் கட்சி(அனுமன் சேனா), இந்து சாம்ராஜ்யம் ஆகிய கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. 
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறுகையில், பிஏபி வாய்க்காலில் தற்போது தண்ணீர் இல்லை. மடத்துக்குளம் கொண்டு சென்று அமராவதியில் கரைப்பது கடினம். எனவே பிஏபி கால்வாயில் தண்ணீர் வந்ததும் உடுமலை, திருப்பூர், கொடுங்கியம் ஆகிய பகுதிகளில் உள்ள விநாயகர் சிலைகளை அதில் கரைப்பது என்றும், அதுவரை சிலைகளை பாதுகாப்பாக வைத்திருப்பதாகவும் கூறினர். இதற்கு பதிலளித்த ஆர்.டி.ஓ.குணசேகரன், திருப்பூரில் மாவட்ட கலெக்டர் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கிறார். அதில் உங்கள் கோரிக்கையை வைக்கலாம் என்றார்.

0 comments: