Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    


லஞ்சம், ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பதற்காக பாடுப்பட்டு வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதன் ஒரு கட்டமாக டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அண்ணா பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும். முதல் கட்டமாக அதன் வேலை நேரத்தை 12–ல் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். குற்றச்செயல்களை உருவாக்கும் மதுக்கூடங்களை (பார்) உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களாக எழுப்பப்பட்டன.

0 comments: