Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    
Displaying NEWS 3.JPG
மதுரை மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனை வலியுறுத்தி இன்று மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க அவர்கள் வந்தனர்.
அப்போது 50–க்கும் மேற்பட்ட பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டரும், மேயரும் இணைந்து தொகுப்பு வீடுகள் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் மறியலின்போது எழுப்பப்பட்டன.

0 comments: