Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in ,    
மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க பேராயராக அந்தோணி பாப்புசாமி பதவி ஏற்பு
மதுரை உயர்மறை மாவட்ட கத்தோலிக்க புதிய பேராயர் பணி ஏற்பு விழா நேற்று தூய பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த விழாவில், 6–வது பேராயராக அந்தோணி பாப்புசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சிக்கு போப் ஆண்டவரின் இந்திய தூதர் சால்வத்தோரே பென்னாக்கியா தலைமை தாங்கி புதிய பேராயரிடம் பொறுப்புகளை வழங்கினார். மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ முன்னிலை வகித்தார். எஸ்.சி., எஸ்.டி., பணிக்குழுவின் செயலர் அருட்தந்தை செபாஸ்டின் வரவேற்றார்.
முதன்மை குழு ஜோசப் செல்வராஜ், துறவிகள் ஜோஸ்பின் நிர்மலாமேரி, பொதுநிலையினர் சார்பில் ஏ.எம்.ஜேம்ஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மதுரை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, பாளையங்கோட்டை, கோட்டாறு ஆகிய 7 மறை மாவட்டங்களுக்கு இவர் பேராயராக பதவி வகிப்பார்.
விழாவில் சென்னை மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்பட 20–க்கும் மேற்பட்ட ஆயர்களும், 400–க்கும் மேற்பட்ட குருக்கள், 600–க்கும் மேற்பட்ட இருபால் துறவிகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
முடிவில் மதுரை வடக்கு வட்டார அதிபர் அந்தோணி ராஜன் நன்றி கூறினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும் நோபிலி அருட்பணி மைய இயக்குநருமான அருட்தந்தை ஜான்பிரிட்டோ பாக்கியராஜ், மறைமாவட்ட பொருளாளர் ஆரோக்கியம், கல்விப்பணிக்குழு செயலர் எட்வர்டு பிரான்சிஸ் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.

0 comments: