Friday, August 29, 2014
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் வெள்ளியன்று விடுத்துள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாற்றத்தின் நாயகனாக தோற்றம் காட்டி மத்தியில் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, ஆட்சிக்கு வந்த ஒரு சில நாட்களிலேயே மக்களுக்கு எதிரான பாதையில் நடைபோடத் தொடங்கிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வங்கி, காப்பீடு உள்ளிட்ட நிதித்துறை மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி உள்ளிட்ட பாதுகாப்புத் துறையில் அந்நியர்களுக்குத் தாராளம்,கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மேல் சலுகை என அள்ளிக் கொடுத்தும் நம்பி வாக்களித்த இந்திய மக்களுக்குப் பாதகமான பாதையில் அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறது. அதேசமயம் நெருக்கடியை திசை திருப்பி ஆதாயம் தேட ஆங்காங்கே மதரீதியான துவேஷத்தையும், மதமோதல்களையும் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்.
அதேபோல் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசு ஒரு பக்கம் விலையில்லா பொருட்களை மக்களுக்கு வாரி வழங்கி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டு, மறுபக்கம் தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைப் பறிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகளையும், ஜனநாயக உரிமைகளையும் பறித்து வருகிறது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. மணல் கொள்ளை, லஞ்சம், ஊழல் சீரழிவு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அதிகரித்திருக்கிறது.மக்களுக்கு எதிராக மத்திய அரசின் அதே தாராளமயக் கொள்கைகளை மாநில அரசும் திணித்து வருகிறது.
அனைத்துப் பகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க எப்போதும் அர்ப்பணிப்பு உணர்வோடு முன்வரிசையில் நின்று போராடி வரும் இடதுசாரிகள் இன்றைய மத்திய,மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகள், தாக்குதலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இந்த வாரம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான குழுக்களாக மக்கள் சந்திப்புப் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன.
அதன் நிறைவாக செப்டம்பர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளின் மேல்மட்டத் தலைவர்கள் தொடங்கி நகர, கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் பிரம்மாண்டமான உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துகின்றனர்.
அதன்படி திருப்பூரில் செப்டம்பர் 1ம் தேதி திங்களன்று மாநகராட்சி அலுவலகம் அருகில் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.ரவி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் பங்கேற்கின்றனர். மாவட்டம், மாநகரம், நகரம், பேரூராட்சி, ஒன்றியம்,கிராமப்புறம் என அனைத்து மட்டங்களில் இருந்தும் தலைவர்கள், நிர்வாகிகள், ஊழியர்கள் இந்த முழுநாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மக்கள் நலன் காக்க நடத்தப்படும் இப்போராட்டத்திற்கு அனைத்துப் பகுதியினரும், ஜனநாயக எண்ணம் படைத்தவர்களும் பேராதரவு கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
லண்டன்: பிரிட்டனில் விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக தங்கியிருந்த 38 இந்தியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் ...
-
குரோம்பேட்டையில் பெற்றோரை இழந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு நகை, பணம் மோசடி செய்து தலைமறைவான பெங்களூர் வா...
-
பிக்சாண்டார்கோயில் பகுதியில் முதன் முறையாக விவசாயிகளுக்கான உழவர் அலுவலர் தொடர்பு திட்டத்தை வேளாண்மை இணை இயக்குநர் தொடங்கி வைத்தார். திரு...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
தூத்துக்குடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நான்காண்டு காலத்தில் செய்த பல்வேறு சாதனையை விளக்கும் விதமாக தூத்துக்குடி மாவட்ட எம்ஜிஆர் இ...
-
திருச்சி ஜீன் 10 இந்து முன்னணி சார்பில் மத வழிப்பாட்டு தலத்தை திறக்க கோரி போராட்டம். இந்தியவில் கொரோனா ...
-
. திருச்சி மாவட்ட பளுதூக்கும் சங்கம் மற்றும் எஸ் ஆர் எம் சுகாதார கிளப் இணைந்து 2018-ம் ஆண்டிற்கான பளுதூக்கும் போட்டி திருச்சி திருவெறும்பூர...
-
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரத்தில் கடந்த சில மாதமாக தெருக்களில் சாக்கடை பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொது மக்கள் அவதிப்பட்டு வருகிறா...
0 comments:
Post a Comment