Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by Unknown   
ஆயிக்கவுண்டம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா, பசுமை விழா, விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு, பழங்கரை ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தொழிலதிபர் சுதாமா கோபாலகிருஷ்ணன், அபிராமி டி.ஆர்.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமையாசிரியர் எஸ்.ஜெயந்தி வரேவேற்றார். கோவை கவிதாசன் சிறப்புரையாற்றினார். இதில், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, மறுவேடப் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வென்றவர்களுக்கும், பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கும், 100 சதவீதம் பள்ளிக்கு வருகை தந்தவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

0 comments: