Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in , ,    
aniruth[1]ரிலீஸ் சர்ச்சை ஒருபக்கம் இருந்தாலும் கத்தி படத்தின் டீஸர், பாடல்கள் எப்போது ரிலீசாகும் என்பது தான் விஜய் ரசிகர்களின் இப்போதைய எதிர்பார்ப்பு.
முன்னதாக கத்தியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதேபோல இப்போது படத்தின் டீஸரையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அனேகமாக இன்னும் சில தினங்களில் டீஸர் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் படத்தில் விஜய் ரசிகர்களுக்காக ஏகப்பட்ட ஆச்சரியங்கள் காத்திருக்கிறது என்று உசுப்பேத்தியிருக்கிறார் மியூசிக் டைரக்டர் அனிருத்.
கத்தி படத்தின் பாடல்கள் பதிவு எல்லாமே கிட்டத்தட்ட முடிந்து விட்டது. பாடல்களை செப்டம்பர் மாதம் ரெண்டாவது வாரத்தில் ரிலீசாகலாம். அதற்காக தேதியை விரைவிலேயே கத்தி டீம் சார்பில் தெரிவிப்பார்கள் என்று சொல்லியிருக்கும் அனிருத் படத்தில் ஒரு காதல் பாடலுக்கு விஜய்யை பாட வைக்கப் போகிறாராம்.

0 comments: