Monday, August 25, 2014

On Monday, August 25, 2014 by Unknown in , ,    
சூர்யாவின் அஞ்சான் படுதோல்வி காரணமாக அவருடைய சகோதரர் நடித்து அடுத்த வாரம் வெளியாவதாக இருந்த ‘மெட்ராஸ்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கார்த்தி, கேத்ரீன் தெரசா நடிப்பில் அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கிய திரைப்படம் ‘மெட்ராஸ்’. இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சூர்யாவின் அஞ்சான் பலத்த தோல்வி அடைந்ததால் அவருடைய சகோதரர் தனது படத்தின் ரிலீஸை ஒத்தி வைக்க கூறியதாகவும், அதன் காரணமாக படத்தின் ரிலீஸ் செப்டம்பர் இரண்டாவது வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஒரே மாதிரியான ரசிகர்கள் இருப்பதால் அஞ்சான் படத்தின் தோல்வி மெட்ராஸ் படத்தையும் பாதிக்கும் என்ற எண்ணத்தில்தான் மெட்ராஸ் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் மெட்ராஸ் படக்குழுவினர் இந்த தகவலை மறுத்துள்ளனர். படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை என்றும், அந்த பணிகள் முடிந்து பின்னர் சென்சாருக்கு அனுப்ப இன்னும் 15 தினங்கள் ஆகும் என்ற காரணத்தினால்தான் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தின் ரிலீஸுக்கும் அஞ்சான் படத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.
ஏற்கனவே கார்த்தி சகுனி, அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி ஆகிய நான்கு தொடர் தோல்விப்படங்களை கொடுத்துள்ளதால் அவர் முழுக்க முழுக்க மெட்ராஸ் படத்தை நம்பிதான் உள்ளார். இந்த படமும் தோல்வி அடைந்துவிட்டால் அவருடைய மார்க்கெட் படுபாதளத்திற்கு சென்றுவிடும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது.

0 comments: