Sunday, August 24, 2014

On Sunday, August 24, 2014 by Unknown in ,    
திருவண்ணாமலை அருகே மனித உருவில் அதிசய ஆட்டுக்குட்டி
திருவண்ணாமலை அருகே அதியச ஆட்டுக் குட்டி பிறந்துள்ளது. மனித வடிவில் இருப்பதால் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து வருகின்றனர்.
உலகில் இயற்கை மாற்றங்கள் அதியசத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் ஒரு அங்கமாக திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்திலும் ஒரு அதிசயம் நடந்துள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள காட்டாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் காத்தவராயன். இவர் தனது வீட்டில் ஒரு வெள்ளாடு வளர்த்து வருகிறார். சினையாக இருந்த இந்த ஆடு நேற்று குட்டி ஈன்றது.
மொத்தம் 3 குட்டிகளை ஆடு ஈன்றது. அதில் முதலில் ஈன்ற குட்டி மிகவும் அதிசயமாக இருந்தது. அடுத்து பிறந்த 2 குட்டிகள் வழக்கம்போல இருந்தது.
முதலில் பிறந்த குட்டியின் முகம் மற்றும் வயிற்று பகுதி மனிதனை போன்று இருந்தது. ஆனால் பிறக்கும்போதே இறந்து பிறந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்களும் கூட்டம் கூட்டமாக சென்று அதியச ஆட்டுக்குட்டியை பார்த்தனர்.

0 comments: