Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    


ஈரோடு எம்.ஜி.ஆர்.சிலை ரவுண்டானா பகுதியில் நேற்று காங்கயம் ஈ.பி.ஈ.டி. பொறியியல் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வீதி நாடகம் நடந்தது. நிகழ்ச்சிக்கு ஈரோடு போக்குவரத்து போலீஸ் துணை சூப்பிரண்டு கொடிச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ–மாணவிகளின் வீதி நாடகம் நடந்தது. குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்றவற்றால் ஏற்படும் விபத்துகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து நடித்துக்காட்டினர். விபத்தில் வாலிபர்கள் கால்கள் உடைந்து விழுந்து கிடப்பது, தலையில் படுகாயம் அடைந்து உயிரிழப்பது, உறவினர்கள் கதறி அழுவது போன்ற காட்சிகளை மாணவ–மாணவிகள் தத்ரூபமாக நடித்துக்காட்டினார்கள். இந்த நாடகத்தை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அப்துல்கலாம், மோகன்ராஜ், கல்லூரி டீன் ஏ.ஜி.என்.நாராயணன், பேராசிரியர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவர் நாடகக்குழுவை திருப்பூர் அரிமா சாலை பாதுகாப்பு திட்ட தலைவர் ராமகிருஷ்ணன் வழிநடத்தினார்.

0 comments: