Friday, August 29, 2014

On Friday, August 29, 2014 by TAMIL NEWS TV in ,    
ஈரோடு: அளவு குறைவாக, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்து, ரேஷன் கடைகளில் எடையளவு கட்டுப்பாடு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி திவ்யநாதன் தலைமையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் தாகிர் அலி முன்னிலையில், ஈரோடு பஸ் ஸ்டாண்டில், கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. பொருட்கள், அதிக விலைக்கு விற்கபடுகிறதா?. பொட்டல பொருட்கள் மீது விற்பனை குறிப்புகள் உள்ளதா?. தண்ணீர் பாக்கெட், குளிர் பானங்கள் குறித்த விலையில் விற்கப்படுகிறதா என, தினசரி மார்க்கெட், பொட்டலங்கள் தயார் செய்து அடைக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பம்ப்களில் கூட்டாய்வு நடத்தப்பட்டது. விற்பனை குறிப்பு இல்லாத பொட்டல பொருட்கள், 35 கைப்பற்றப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உரிய காலத்தில் மறு முத்திரையிடப்படாத எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, முத்திரையிடப்படாத மற்றும் மறுபரிசீலனை சான்றினை உரியவாறு வெளிக்காட்டப்படாத, 54 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அளவு குறைவு மற்றும் மறு பரிசீலனை சான்று, வெளி காட்டி வைக்கப்படாத நிறுவனங்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெட்ரோல், டீஸல் மற்றும் மண்ணெண்ணெய் பம்ப்கள் ஆய்வு செய்து, அளவு குறைவாக விற்பனை செய்த, மூன்று நிறுவன பம்ப் நிறுத்தம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொட்டல பொருட்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர் பானங்கள், பொட்டலங்களில் தயாரிப்பாளர், பேக்கரி பெயர், முகவரி, கஸ்டமர் கேர் எண், தயாரிக்கப்பட்ட, பேக் செய்த மாதம், ஆண்டு, நிகர எடை, விற்பனை விலை, வரி உள்ளிட்ட விபர குறிப்புகள் அனைத்தும், பொட்டல பொருட்கள் சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து குறிப்புகளையும் பின்பற்ற வேண்டும். முத்திரையிடப்படும் எடை அளவைகள், காலம் தவறாது குறிப்பிட்ட காலத்துக்குள், மறு முத்திரையிட்டு, வணிகத்தில் பயன்படுத்த வேண்டும், என கேட்டு கொள்ளப்பட்டது.

0 comments: