Tuesday, August 12, 2014

On Tuesday, August 12, 2014 by Unknown in ,
மேலூர் அருகே விவசாயிகளுக்கு மானிய விலையில் வைக்கோல் விநியோகம்
மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இங்குள்ள கால்நடை மருத்துவமனையில் அரசின் மானிய சலுகை விலையில் வைக்கோல் ஒரு கிலோ ரூ.2 வீதம் சராசரியாக வாரத்திற்கு 90 கிலோ வரை வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கால்நடை உதவி இயக்குநர் ராஜதிலகம் கூறியதாவது:–
தமிழக அரசின் கால்நடை துறையின் சார்பில் கால்நடை இயக்குநர் கோபிநாத், இணை இயக்குநர் ரவீந்திரன் ஆகியோரின் அறிவுரையின்படி தற்போது மேலூர் தாலுகா அளவில் வெள்ளலூர் கருங்காலகுடி ஆகிய பகுதிகளில் விவசாயிகளுக்கு கிலோ ரூ.9.50 விலை உள்ள வைக்கோல்களை கிலோ ரூ.2–க்கு விவசாயிகளுக்கு வாரம் 90 கிலோ வரை பதிவு செய்து சலுகை விலையில் வழங்கி வருகிறோம்.
இத்திட்டம் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு வறட்சியான இந்நேரத்தில் கால்நடைகளுக்கு பயன்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வாடிப்பட்டி பொறியியல் மைய கூட்டுறவு சங்க தலைவர் சந்தனத்துரை, உதவி தலைவர் தங்கராசு மற்றும் மருத்துவர்கள் இருந்தனர்.