Thursday, August 14, 2014
இந்தியாவின் 68–வது சுதந்திரதின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா காலை 9 மணிக்கு தேசியக்கொடி யேற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து சுதந்திரதின உரையாற்றும் அவர் நலத்திட்ட உதவிகள் மற்றும் விருதுகளை வழங்குகிறார். சுதந்திரதின விழாவையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வ.உ.சி. மைதானத்தில் சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக் கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவில் கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றுகிறார்.
போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளும் அவர் சுதந்திர போராட்ட தியாகிக ளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கிறார்.
பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பதக்கங்களை அணிவிக்கிறார். அதைத் தொடர்ந்து பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொள்ளும் கலைநிகழச்சிகள் நடைபெறுகிறது.
சுதந்திரதின விழாவையொட்டி கோவை நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைச் சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. வாகனங்களில் பயணம் செய்வோரின் விவரங்களை முழுமையாக அறிந்த பின்னரே அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
இதேபோல் அனைத்து லாட்ஜூகளிலும் சோதனை நடைபெறுகிறது. மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருந்தால் பொதுமக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மைதா னத்தில் நாளை காலை 8 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக் டர் கோவிந்தராஜ் தேசியக் கொடியேற்றி போலீசார் மற்றும் என்.சி.சி., ஊர்க் காவல் படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
அதன் பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுர விக்கும் அவர் ஏழை–எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவி களை வழங்குகிறார். மாவட்டம் முழுவதும் இருந்து கலந்து கொள்ளும் மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறு கிறது. சுதந்திரதின விழாவை யொட்டி திருப்பூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் மேயர் விசாலாட்சி கலந்து கொண்டு தேசியக் கொடியேற்று கிறார்.
நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நாளை காலை 10 மணிக்கு சுதந்திரதினவிழா நடைபெறுகிறது. கலெக்டர் சங்கர் தேசியக்கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். பின்னர் நலத்திட்ட உதவி வழங்குகிறார்.
நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் சமீப காலமாக நக்சலைட்டுகளின் நடமாட்டம் உள்ளதாக போலீசுக்கு தகவல்கள் வந்தன. அதன்பேரில் தமிழக போலீசாரும், கேரள போலீசாரும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
மேலும் சுதந்திர தினத்தன்று நீலகிரி–கேரள எல்லையில் உள்ள போலீஸ் நிலையங்களை நக்சலைட்டுகள் தாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்திருந்தது. அதன் பேரில் அந்த காவல் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நீலகிரி–கேரள–கர்நாடக எல்லைப் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களுக்கான வாக்குகளை பதிவு செய்வதற்காக ஒவ்வொரு...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
சிவன்மலை கோயிலில் பக்தர்கள் பயன்படுத்தி வரும் யானைத்தடம் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. இதை திறந்து விட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் வி...
-
ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் விரைவில் குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. வேலூர் மாவட்...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...

0 comments:
Post a Comment