Thursday, August 14, 2014

On Thursday, August 14, 2014 by farook press in ,    

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த புகாரில் கூறி இருப்பதாவது:–
வெள்ளலூர் குளத்தில் வண்டல் மண், கிராவல் மண் எடுக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு, பகலாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ் 15 அடி வரை தோண்டி கிராவல் மண் கடத்தி வருகிறார்கள்.
குளம் சீரமைப்பு என்ற பெயரில் மண் கடத்தல் நடக்கிறது. இந்த குளத்தில் மண் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. எனவே மண் எடுக்க தனியாருக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. சூலூர் பகுதி பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘‘செம்மாண்டம்பாளையம் குளம், வண்ணத்தாங்கரை ஓடை மூலமாக கிடைக்கும் நீரில் சூலூர் சுற்றுப்பகுதியில் விவசாயம் நடக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த நீராதாரங்கள் உதவியாக இருக்கிறது.
இந்த குளத்தை விவசாயி கள் தூர் வாரி சீரமைக்க வண்டல் மண்ணை விவசாய பணிக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.
கோவை மினி லாரி ஆபரேட்டர் சங்கத்தினர் அளித்துள்ள மனுவில், ‘‘வெள்ளலூரில் லாரிப் பேட்டை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கே மினி லாரிகள் நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: