Sunday, September 21, 2014
திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம்
ரூ.1,00,000 கோடி மதிப்பை விரைவில் எட்டுவற்கான வாய்ப்புகள் உள்ளன என்று
இந்திய தொழில் கூட்டமைப்பின்(சி.ஐ.ஐ) தமிழக தலைவர் ரவிசாம்
பேசினார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கவுன்சில் சார்பில் பின்னலாடை தொழிலின் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ‘கிளஸ்டர்’ எனப்படும் ஒருங்கிணைந்த தொழில் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், 13 பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தொடக்க விழா ஏஞ்சல் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.சி.ஐ.ஐ. திருப்பூர் மாவட்ட கவுன்சில் துணைத் தலைவர் வேலுச்சாமி வரவேற்றார். ஒருங்கிணைந்த தொழில் மையத்தின் தலைவர் நாராயணன், முதன்மை ஆலோசகர் வைத்தியநாதன், தொழில் அதிபர் பங்கேரா ஆகியோர் தொழில் முனைவோர்களுக்கு நிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்ப விவரங்களை விளக்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சி.ஐ.ஐ. தமிழக தலைவர்
ரவிசாம் பேசியது:
திருப்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு 5 மாதங்கள் தான் ஆகிறது. இந்நிலையில் 13 பின்னலாடை நிறுவனங்கள் ஒன்றிணைந்து
‘கிளஸ்டர்’ அமைப்பை ஏற்படுத்தியுள்ளன. நிறுவனத்தில் உண்டாகும் உற்பத்திக் குறைபாடுகள், பிழைகளை களைந்து மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு அதன் மூலமாக செலவுகளை குறைத்து, உற்பத்தியை பெருக்குவதற்கு இந்த மையம் உதவிகரமாக அமையும்.
திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி மதிப்பு ரூ.18,000 கோடி மதிப்பில் உள்ளது.
இந்த ஏற்றுமதியை ரூ.1,00,000 கோடி மதிப்புக்கு உயர்த்துவதற்காக தொழில்துறையினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு
பல்வேறு திட்டங்களை உருவாக்கி வருகின்றனர். இந்திய தொழில் வளர்ச்சியிலும், தமிழக தொழில் வளர்ச்சியிலும் திருப்பூரின் பின்னலாடை தொழில் முக்கிய பங்களிப்பு செலுத்து வருகிறது. எனவே, ரூ.1,00, 000 கோடி மதிப்புக்கான வளர்ச்சி நிலை எட்டப்படும் என்பதில் சந்தேகமில்லை. சி.ஐ.ஐ.அமைப்பில் இடம் பெற்று 6 மாதங்களுக்குள் திருப்பூரில் கிளஸ்டர் ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது ஆகும் என்றார்.
இந்த கருத்தரங்கில் ‘கிளஸ்டர்’ அமைப்பில் இணைந்துள்ள நிறுவன பிரதிநிதிகளுக்கு வங்கி கணக்கு பரிமாற்றம், உற்பத்தி பணிகளில் செய்ய வேண்டிய பணிகள், செலவுகளை மிச்சப்படுத்தும் நுணுக்கங்கள், சந்தையில் பொருள்களை விற்பனை செய்யும்போது மேற்கொள்ள வேண்டியவை குறித்த பல்வேறு குறிப்புகள் தெரிவிக்கப்பட்டன.
அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் கார்ப்பரேசன், ஆர்ம்ஸ்ட்ராங் நிட்டிங் மில், பி.எஸ் அப்பேரல், கரோனா நிட்வேர், சிபிசி பேஷன்ஸ் ஆசியா பிரைவேட் லிமிடெட், தன்வர்ஷினி எக்ஸ்போர்ட்ஸ், எஸ்டீம் நிட்வேர், கீதாலயா அசோசியேட்ஸ், கந்தன் நிட்ஸ், எம்.எஸ்.கார்த்திகேயன் கார்மெண்ட்ஸ், ராகம் எக்ஸ்போர்ட்ஸ், எஸ்.ஆர்.ஜி அப்பேரல், வார்ஷா இண்டர்நேஷனல் ஆகிய 13 நிறுவனங்கள் இந்த கிளஸ்டர் குழுவில் இணைந்துள்ளன

Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு குளித...
-
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஜாகித்கோகி. இவரது மகள் ரசிதா(வயது16). இவர் 15–வேலம்பாளையம், சோளிபாளையத்தில் தங்கி காந்திநகர் பகுதியில் உள்ள ...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
திருச்சி மாநகராட்சியில் துணை மேயர் மீது 44 வா ர்டு மாமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்...
-
திருச்சி 9.5.16 சபரிநாதன் 9443086297 திருச...
-
மதுரை மாநகர், புறநகர், வடக்கு, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக ...

0 comments:
Post a Comment