Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    





திருப்பூர்: திருப்பூரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 188 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருப்பூர் மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சேஷசாயி உத்தரவின் பேரில் திருப்பூர், வீரபாண்டி, திருப்பூர் ரூரல், தெற்கு மற்றும் திருப்பூர் மத்திய போலீசார் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சே £தனையில் ஈடுபட்டனர்.பள்ளிக்கூடங்கள் உள்ள பகுதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் பான்மசாலா ஆகியவை 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளர்களான தாராபுரம் ரோட்டைச் சேர்ந்த சின்னசாமி (27), முத்தையன் கோவில் வீதியைச் சேர்ந்த பழனிச்சாமி (45), தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஸ் (33), வீரபாண்டியை சேர்ந்த ரவி (51), ஆர்.வி.இ.லே-அவுட் பகுதியைச் சேர்ந்த டேவிட், சுந்தர்ராஜன் (55) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 186 பாக்கெட் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


0 comments: