Sunday, September 21, 2014

On Sunday, September 21, 2014 by Unknown in ,    
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் தனது காதலியைக் கொடூரமாக கொலை செய்து, அவரின் மூளை, இதயம்,  நுரையீரல் பகுதியை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   
 
அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தை சேர்ந்த டாமி என்னும் 46 வயது பெண் அவசர உதவிக்கு அழைப்பு விடுத்து, தனது 33 வயது காதலர் ஜோசெப் தன்னுடைய வீட்டினுள் அத்துமீறி நுழைய முயல்வதாக புகார் அளித்தார்.
 
இதையடுத்து ஜோசெபிடம் பேசிய காவல் துறையினர் அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள். இச்சம்பவம் நடந்து சில மணி நேரத்திற்கு பிறகு, டாமியின் தோழி அவசர உதவிக்கு அழைத்து டாமியை தொடர்பு கொள்ள இயலவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
 
இதனால் சந்தேகமடைந்து அவரின் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், டாமி உடல் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்ததையும், அவரது உடலில் இருந்து மூளை, இதயம், நுரையீரல் பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்ததையும் அறிந்தனர். 
 
இதையடுத்து உடனடியாக டாமியின் காதலர் ஜோசெப்பின் வீட்டிற்கு   விரைந்த காவல் துறையினர் அங்கு ரத்தக்கறை பதிந்த பொருட்களையும், கத்தியையும் கைப்பற்றினர். 
 
உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர் இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் 

0 comments: