Tuesday, September 09, 2014

On Tuesday, September 09, 2014 by farook press in ,    
இந்தியாவின் மிக விலையுயர்ந்த தேயிலை தயாரிப்பாளர்களில் ஒருவராக டார்ஜிலிங் மகாய்பாரி டீ எஸ்டேட் தேர்வாகியுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ஒரு கிலோ தேயிலை வெளிநாடுகளில் 1850 டாலர்களுக்கு மேல் 
விற்பனையாகிறது. இந்திய பண மதிப்பில் இது ரூ.1.12 லட்சமாகும். 
இதுகுறித்து, டீ போர்டு சேர்மேன் சித்தார்த் கூறுகையில், ''இந்திய தேயிலை ரகமான மகாய்பாரி-க்கு ஒரு கிலோவுக்கு 1850 அமெரிக்க டாலர்களுக்கும் மேல் பணம் கொடுத்து வாங்க ஆர்டர்கள் வந்திருப்பது பெருமையாக உள்ளது. 
குறிப்பாக, ஜப்பான், இலண்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் மகாய்பாரி டீ-க்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. மதிப்பு கூட்டுதல், பிராண்டு பில்டிங் போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்திய டீ போர்டு மற்றும் தேயிலை தொழிலுக்கு தற்போது இந்த சாதனை ஆறுதல் அளித்துள்ளது. கர்சியோங் பகுதியில் அமைந்துள்ள மகாய்பாரி டீ எஸ்டேட் ராஜா பானர்ஜி என்பவரின் பரம்பரை சொத்தாக இருந்தது வந்தது. சமீபத்தில் தான் அதன் 90 சதவீதத்தை லட்சுமி குழுமம் விலைக்கு வாங்கியது. உரிமையாளர்கள் மாறிய பின்னும் கூட மகாய்பாரி இந்தியாவின் ஐகானிக் டீ யாக உள்ளது. இன்னும் அதே உயர்ந்த தரத்துடன் உள்ளதே இதற்கு காரணம்.'' என்றார். 

இந்திய தேயிலை இதுவரை இந்த அளவுக்கு விலை போனதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

0 comments: