Sunday, September 07, 2014

On Sunday, September 07, 2014 by farook press in ,    
நாமக்கல்லை சேர்ந்தவர் துரை(வயது 32). இவர் திருப்பூர் சந்திராபுரம் மர்சியம்மாள் நகர் 2–வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அப்பகுதியில் லாரி ஒர்க்ஷாப் வைத்துள்ளார். சம்பவத்தன்று துரை தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான நாமக்கல்லுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் மறுநாள் காலை துரையின் வீட்டு பூட்டு உடைந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் துரைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துரை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து துரை அளித்த புகாரின் பேரில் திருப்பூர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், தலைமை ஏட்டு விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக திருநெல்வேலி திருக்கன்குறிச்சியைச் சேர்ந்த அருணாசலத்தின் மகன் அருண்குமார்(23), சேலம் ராமரெட்டிபட்டியைச் சேர்ந்த தங்கராஜின் மகன் கார்த்திக்(18) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயங்கள், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

0 comments: