Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
குனியமுத்தூர், செப்.13–
கோவை ஈச்னாரி பாட சாலை வீதியை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 27). இவர் இன்று காலை 6.30 மணியளவில் பால் வாங்குவதற்காக வெளியே வந்தார்.
கடைக்கு சென்று பால் வாங்கிவிட்டு வீடு திரும்பிய போது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றில் மழைக்கோட்டு அணிந்தபடி நின்று கொண்டிருந்த வாலிபர் கண்ணிமைக்கும் நேரத்தில் கலைச்செல்வியின் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டார். 
இதுகுறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் கூறம்போது பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். நகைகள் அணிந்து சாலையில் வரும்போது அவை வெளியே தெரியாத வண்ணம் சேலை அல்லது துப்பட்டாவால் மறைத்து கொள்ள வேண்டும்.
சந்தேகப்படும் படியாக நபர்கள் யாராவது பின் தொடர்ந்தாலோ அல்லது தென்பட்டாலோ அவர்கள் குறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நகை பறிப்பு சம்பவத்தை தடுக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்படும் என்றார்.

0 comments: