Saturday, September 13, 2014
உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் உத்ரா (வயது 28). இவர் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:–
கோவை கணபதி மணியகாரன்பாளையம் ராக்காச்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால்–தேவிகாவின் மகன் சதீஷ்பாபுவுக்கும் (35) எனக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சதீஷ்பாபு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருவதாக என்னிடம் கூறினார்கள். திருமணம் முடிந்த பின்பு சதீஷ்பாபு என்னை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார். அங்கு சென்றபோதுதான் அவருக்கு அமெரிக்காவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அவர் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை கொடுமைப்படுத்தினார். இதனால் நான் கோவை வந்துவிட்டேன். பின்னர் இதுகுறித்து எனது மாமனார்–மாமியாரிடம் கேட்டபோது, நீ எனது மகனுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு என்னை கொடுமைப்படுத்தினார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அதன்பேரில் போலீசார் நந்தகோபால், தேவிகா மற்றும் சதீஷ்பாபு ஆகியோர் மீது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்பட 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவான நந்தகோபால், தேவிகா ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
-
மலேசியா வில் நடக்கும் உலக அளவில் பங்கேற்க சிலம்பபோட்டியாளர்கள் மாவட்ட ஆட்ச்யரிடம் மனு ...
-
மதுரை மாவட்டம் பரவை பகுதியில் அமைந்துள்ள மங்கையர்கரசி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில் முனைவோர் விழிப்புணர்வு கருத்தரங்கில் உரை ய...
-
மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் சார்பில் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை நிகழ்ச்சி சங்கத் தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. நிர்வாகிகள் ...
-
LnDr J Ganesh முகநூல் செய்தி. QUIZ COMPETITION among college and school students on EYE DONATION AWARENESS on the eve of 30 th National Eye...
-
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது. திருப்பூர...
-
அத்துமீறி அண்ணன் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தட்டிக்கேட்ட தம்பியை கத்தியால் குத்தி கொலை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள முள்ளா...

0 comments:
Post a Comment