Saturday, September 13, 2014
வால்பாறையில் வீட்டை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இதில் மேற்கூரை வழியாக ஏறி வெளியே வந்து பெண் தனது குடும்பத்துடன் உயிர்தப்பி னார்.
அட்டகாசம்
வால்பாறையை அடுத்துள்ள சிங்கோனா, பெரியகல்லார் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்துக்கு (டேன்டீ) சொந்தமான சிங்கோனா முதல் பிரிவு குடியிருப்பு பகு திக்குள் புகுந்த காட்டு யானைகள் மூன்று வீடுகளை இடித்து பொருட்களை சூறை யாடின. அதே வீடுகளை மீண் டும் 10–ந் தேதி இரவு இடித்து தள்ளின.
இந்த நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு பெரியகல்லார் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் 9 யானைகள் கொண்ட கூட்டம் புகுந்தது. மேரி என்ற தொழி லாளியின் வீட்டின் சமைய லறையின் கதவை உடைத்தன. வீட்டின் உள் அறையில் தனது மகன், மகள்களுடன் தூங்கிக் கொண்டிருந்த மேரி சமையல் அறையில் பொருட் கள் விழும் சத்தம் கேட்டு கதவை திறந்து பார்த்தார். அப்போது யானைகள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டுக்கொண்டு துதிக்கையை உள்ளேவிட்டு சமை யல் அறையில் இருந்த அரிசி, பருப்பு போன்ற உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிட்டுக் கொண் டிருந்தன.
உயிர் தப்பினார்கள்
இதை பார்த்து அச்சம் அடைந்த அவர், உடனடியாக ஏணி வழியாக வீட்டின் மேற்கூரையில் இருந்த ஓடுகளை பிரிந்து எறிந்து விட்டு, தனது மகன், மகள் களுடன் வெளியே வந்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினரும், அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மானாம்பள்ளி வனச்சரக வேட்டைத்தடுப்பு காவலர் களும் விரைந்து வந்து காட்டு யானைகளை விரட்டினார்கள்.
ஆனால் யானைகள் போகாமல் அங்கேயே நின்று கொண்டு வீட்டை இடித்தன.அதிகாலை 3.30 மணிவரை அந்த இடத்தை விட்டு நகராமல் போக்கு காட்டி வந்த யானைகள் அதன்பின் வனப்பகுதிக்குள் சென்றன. பெண் தொழிலாளி மேரி தனது மகன், மகள்களுடன் மேற்கூரை வழியாக வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பி னார்கள்.
இது குறித்து எஸ்டேட் பகுதி மக்கள் கூறுகையில், யானைகள் வரும் போது நாங்களும், வனத்துறையினரும் துரத்தினால் சென்றுவிடும். ஆனால் தற்போது சுற்றித் திரியும் யானைகள் துரத்தி னால் போகாமல் எதிர்த்து கொண்டு விரட்டுகிறது. எனவே கட்டாயம் கூடுதலாக வனத்துறையினரை பணியில் அமர்த்தி காட்டுயானைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி குடியிருப்புக்குள் நுழைய விடாமல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று கூறினார்கள்.
தகவல் கொடுக்க வேண்டும்
இது தொடர்பாக வனத் துறையினர் கூறும் போது, இந்த ஆண்டு முன்கூட்டியே கேரள வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் வரத் தொடங்கி உள்ளதால், மேலும் அதிகளவு யானைகள் வருவ தற்கு வாய்ப்புகள் உள்ளன.எனவே வால்பாறை சுற்றுவட் டார எஸ்டேட் பகுதி மக்கள் அதிகவனத்துடன் இருக்க வேண்டும்.கட்டாயப்படுத்தி யானைகளை விரட்டினால், அந்த கோபத்தை வேறு இடங் களில் காட்டிவிடும். இதனால் பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்படுவதற்கு வாய்ப் புள்ளது. எனவே நாங்களும் உயிர்சேதம் ஏற்படாமல் தடுக் கும் பணியில் தான் ஈடுபடு கின்றோம். எனவே எந்த எஸ்டேட் பகுதியில் யானை களை பார்த்தாலும் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
மாற்று வீடு
தகவல் அறிந்து சம்பவயிடத் திற்கு வந்த வால்பாறை தாசில் தார் நேரு, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் அறிவொளி, கிராம நிர்வாக அலுவலர் ராஜகுரு, வருவாய் ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் மேரியின் குடும்பத்திற்கு குடியிருக்க மாற்று வீடு ஏற்பாடு செய்தனர். மேலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மேரி குடும்பத் திற்கு அரிசி, ரேஷன் பொருட் கள், காய்கறிகள், இலவச வேட்டி–சேலை ஆகியவை களையும் வழங்கினார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், கைப்பந்து கேரம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்...
-
கரூரில் மன நலம் பாதித்தவர் தூக்கிட்டுத் தற்கொலை க.பரமத்தி, : கரூர் மாவட்டம், க.பரமத்தி அ...
-
திருச்சி 23.1.17 திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப்பணியாளர்கள் ச...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
நாட்டுக்கு தான் சுதந்திரம் கிடைத்துள்ளது. மத சுதந்திரம் இன்னும் இந்துக்களுக்கு கிடைக்கவில்லை. நமது கோவிலை நாம்தான் நிர்வகிக்க வேண்டும். அரசு...
-
சித்தி பாரதிதேவியுடனான பிரச்னைகள் ஓயந்து தற்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் அஞ்சலி. சித்தியுட...
-
நெல்லையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மீது தடியடி நடத்திய போலீசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசைக் கண்டித்து நெல்லையில் வெள்...

0 comments:
Post a Comment