Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
ஆனைமலையில் திருமண ஆசை வார்த்தை கூறி பிளஸ்–1 மாணவியை கடத்திச்சென்று கற்பழித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
பிளஸ்–1 மாணவி கடத்தல்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 11–ம் வகுப்பு படித்து வரும் மாணவி, கடந்த 1–ந் தேதி மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் அந்த மாணவியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே, ஆனைமலை அருகே உள்ள வளந்தாயமரத்தில் கூலி வேலை செய்து வந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கையா (27) என்பவர் அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்றது போலீசாருக்கு தெரியவந்தது. அத்துடன் அவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
2 பேர் கைது
அதன்பேரில் போலீசார் திண்டுக்கல் விரைந்து சென்று அங்கு இருந்த தங்கையா மற்றும் அந்த மாணவியை மீட்டு, ஆனைமலைக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் அந்த மாணவியிடம் விசாரணை செய்தபோது, திருமண ஆசைவார்த்தைக்கூறி அந்த மாணவியை தங்கையா கடத்திச்சென்றதும், அதற்கு தங்கையாவின் நண்பரான தெய்வமணி உதவியாக இருந்ததும் தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் தங்கையாவையும், அவருடைய நண்பர் தெய்வமணியையும் (32) கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பொள்ளாச்சி 1–வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
5 குழந்தைகள்
மேலும் போலீசார் அந்த மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி, அவருடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அந்த மாணவியை திருமண ஆசைவார்த்தைக்கூறி கடத்திச்சென்ற தங்கையாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 5 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: