Saturday, September 13, 2014

On Saturday, September 13, 2014 by farook press in ,    
காதலிக்கு வேறொருவருடன் திருமண ஏற்பாடு நடந்ததால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
காதலிக்கு திருமண ஏற்பாடு
கோவையை அடுத்த பிரஸ்காலனி அருகேயுள்ள பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகமத்சாலியா. இவருடைய மகன் ரகமத்துல்லா (வயது 29). இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் ரகமத்துல்லா ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணிற்கு அவர்களது வீட்டில் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்துள்ளர். இதுகுறித்து தகவல் அறிந்த ரகமத்துல்லா அந்த பெண்ணிடம் போனில் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த பெண் ரகமத்துல்லாவிடம் பேசவில்லை.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இதனால் கடந்த சில நாட்களாக ரகமத்துல்லா மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் நாயக்கனூர் மாகாளியம்மன் கோவில் அருகேயுள்ள ரெயில்வே லெவல் கிராசிங் பகுதியில் நின்று கொண்டு ரகமத்துல்லா போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி பயணிகள் ரெயில் வந்து கொண்டு இருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் ரகமத்துல்லா ரெயில் முன் பாய்ந்தார்.
இதில் ரெயிலில் அடிபட்டு ரகமத்துல்லா கைகள், கால்கள் துண்டு துண்டாகி துடிதுடித்து இறந்தார். இந்த சம்பவத்தால் ரெயில் உடனே அந்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோவை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் ரகமத்துல்லா உடலை கைப்பற்றி பிரேத பிரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பயணிகள் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments: